பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163) பாகம்) தெலுங்குநாடு. உற்சவங்களையும் கண்டதாக எழுதியிருக்கின்றனர். மற் றோர் யாத்திரைக்காரராகிய "அப்தல் ரஜாக்” என்பவர் விஜயநகரத்தைப்பற்றிப் பின்னும் விசேஷித்து எழுதியிருக் இன்ற னர். - அதாவது, தான் (அப்தல் ரஜாக்) பாரசீக நாட்டு "கோரேசன்' இராஜாவின் ஏஜன்டாகி மலையாளக் கரையோர மாக மங்களூருக்கு வந்து அங்கிருந்து விஜயக்கருக்கு வந்த தில், அந்த விஜயநகரமும் அதைச் சுற்றிலுமிருந்த விடம் களில் பலவித பயிர்கள் செய்யப்பட்டு ஓர் சிங்கார நந்த வனம் போலவும், அதன் இராஜாங்கம் தெற்கே இலங்கை முதல் கூல்பர்கா வரையிலும், மலையாளம் முதல் பங்காளம் வரையிலும் பாவி, அந்த எல்லைக்குள்ளாக 300 பெரிய அர ணான கோட்டைகள் கட்டியிருந்தனவாகவும், அவைகளை படக்கி ஆண்ட இராயலு இந்தியா தேசத்திற்குள் சிறந்த சக்கரவர்த்தியாகவும், அவனுக்குப் பிரதி மாதமும் இரமச் சம்பளம் பெற்றுவந்த 11,00,000 லசும் சேனைகள் சுத்த வீரர்களாகவும், ஆயிரக்கணக்கான யானைகளும், அனேக ஆயிரங் குதிரைகளும், இரதங்களும் இருந்தனவாகவும், வித்யாங்காம் அல்லது விஜயநகரபட்டணம் 10 மைல் நீள மும், 12 மைல் அகலமுமுள்ள விஸ்தீரண முள்ள தாயும், அதைச் சுற்றிலும் எழுசுற்றுள்ள பிரமாண்ட கல்சுவர்கள் கட்டப்பட்டும், அதற்குள் அரணான ஓர் பெரிய கோட்டை யும், உருவிய சுத்திகளோடு இமைபோடாமல் அனோ வீரர்கள் பாதுகாத்துக்கொண்டிருந்ததாகவும், அந்த நகரத் கில் எங்கு பார்த்தபோதிலும் விசாலமான ரோட்டுகளும், வாயக்கால்களும், கூடகோபுர மாடமாளிகைகளும், அநேக வித புஷ்பங்களையும் பழங்களையும் தரும் நந்தவனங்களும், உத்தியானவனங்களும் நிறைந் திருந்ததாகவும், அனேக ஆபரணக்கடைகளும், ஆடைகளை விற்கும் கடைகளும், தானியக்கடைகளும், பலசரக்குக் கடைகளும் நிறைவு பெற்று, குடிகள் குதூகலத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த தாகவும், கண்டு ஆநந்தித்துச் சரித்திர மெழுதி இருப்ப தன்றியில், அந்த ஸமஸ்தானத்தில் நீதி பரிபாலனத்துக் காக அரண்மனைக்குப் பின்புறத்தில் கட்டியிருந்த பெரிய நீதிஸ்தலத்தில் தண்டநாயுடு" என்ற நீதி அதிபர் பிரதி தினமும் வந்து பிராதுக்காரர்களிடம் சொற்ப நஜர் பெற் றுக்கொண்டு, பிராதுகளை விசாரித்து நீதி செலுத்தியும்,