பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம் (2-ம் கிருஷ்ணதேவராயலின் முதல் விவாஹம் அப்படி நரபதி சமஸ்தானத்தார் வந்திறங்கி இருக் கிற சங்கதிகளைப் பிரதாபருத்திர கஜபதி கேட்ட வுடனே தமது பந்து மித்திரர்களையும், ஸமஸ்தான உத்தியோகஸ் தர்களையும், எதிர்கொண்டழைத்து வரும்படி அனுப்பிவிட் கும், தாம் அந்தபுரத்துக்கு வந்து தமது பத்தினிமார்களை யும், குமாரத்தியையும் பார்த்து, "தக்க ஆடை ஆபரணாதி களைப் பூண்டு நாபதி ஸமஸ்தானத்துக் கேகத் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டும், கிருஷ்ண தேவராயலா கிய மருமகனுக்குத் தரவேண்டிய வரிசைகளைத் தயார் செய்யப் போனார். - இத்தியாதி சங்கதிகளை அறிந்த கஜபதியின் பட்ட மஹினி தனது அருமை மகளைப் பார்த்து, கட்டித் தழுவிக் கண்ணீர்விட்டு அந்தோ மகளே! உன்னைப் பெற்றெடுத்த அருமை என்ன! உன் ஜாதியின் பெருமை என்ன! அந் தஸ்தென்ன! உன்னை நல்ல குடும்பத்திற் பிறந்த குலஸ்த னுக்குக் கட்டிக்கொடுக்காமல், வைப்பாட்டி மகனான கிரு ஷ்ணதேவராயலுக்கு மன வியாக்க உனது தந்தை ஆத்தி சப்பட்டு வாக்குத்தத்தம் செய்து விவாகம் செய்து விட்டார். அன்று முதல் நமது பந்து மித்திரர்கள் நம்மை இழிவாக எண்ணுகிறார்கள். அது சங்கதி உனது அப்பாவுக்குத் தெரியாது. அவர் கேவலம் இராஜ தந்திரத்தை யனு சரித்துத் துர்மந்திரி வார்த்தையைக் கேட்டு இப்படிச் செய் தாசேயொழிய, பந்து மித்திரர்களுடைய யோசனையை அனுசரித்தாரில்லை. இனி என்ன செய்யலாம். உன் தலை விசி இப்படி முடிந்தது. ஆயினும் இப்படி நமது குடும் பத்துக்கு வந்த குறைவை நீக்க உன்னால் கூடும். கண்ணே ! கவனமாகக் கேள், கிருஷ்ணதேவராயன உள் படுக்கை வீட் டுக்குள் வந்து படுத்துத் தூங்கும்போது அவனது கட்டாரி யாலே அவனுடைய வயிற்றில் ஒரே குத்தாகக் குத்திக் கொன்றுவிட்டு நம் வீட்டுக்கு வந்துவிட்டால், நமது குடும் பத்துக்கு இப்போது வந்திருக்கும் இழிவான பெயர் மாறி, நல்ல புகமுண்டாகும். இப்படிச் செய்வது தான் க்ஷத்திரிய தருமம். இதை நீ கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று சொல்ல, இதைக் கேட்ட கஜபதி குமாரத்தி, 'என் தாயே! தங்கள் வார்த்தையைத் தடுத்துப்பேசுவதாக எண்ண வேண்