பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

196 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் சரித்திரத்தை நாம் முன்னரே பல அரண்மனை மங்கையர்க ளால் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிக் கேள்விப்படிருந் தும், "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்னும் பழ மொழிப்படி அரசர் ஆரத்தீர யோசியாடால், ஆயிரங்காலத் துப் பயிராகிய இந்தப் பெண்ணை இப்படிப்பட்ட இழிகுலத் தானுக்குக் கட்டிவிட்டார். இனி விசனப்படுவதிற் பிரயோ சனமில்லை. இக்குறைவை நீக்க உபாயம் செய்ய வேண்டும் என்று நீள நினைத்துத் தன் மகளிடம் வந்து பின் வருகிற படி சொல்லலுற்றாள் : "முத்து மணியே ! உன் தலைவிதியை என்னென்று சொல்வேன்? உன்னைப் பெற்ற பெருமை யென்ன? உன்னை வளர்த்த அருமை என்ன? இழிகுலத்தானென்று சொல்லப் படும் கிருஷ்ணதேவராயலுக்கு உனது தந்தை கேவலம் இராஜகீய விஷயமாகக் கலியாணம் செய்து கொடுப்பதாக வாக்களித்து முன்னும் பின்னும் விசாரியாமல் விவாகத் தையும் செய்துவிட்டார். முன்னே கஜபதிராயலும் இப் படியே தமது நாயகியோடு கலந்து பேசிக் கலியாணம் செய் யாமல், கேவலம் துர்மந்திரிகளுடைய வார்த்தைகளுக்கு இணங்கித் தன் குமாரத்தியைக் கிருஷ்ணதேவராயலுக்கு விவா ஹம் செய்ததனால், அவர் பெண் இழிகுலத்தானோடு வாழ்வதைப் பார்க்கிலும் வனப்பிராணிகளோடு வாழுதல் உசிதம்' எனக் கருதி, இப்போது வனசஞ்சாரியாகத் திரி ந்து தவிக்கிறாள். இது சங்ககி இத்தேசத்திலிருக்கும் ஒவ் வொரு இராஜகுடும்பத்தாருக்கும் தெரிந்திருப்பதைப் போலவே, நமது அந்தப்புர ஸ்திரிகளுக்கும் தெரிந்த விஷ யம். தெரிந்திருந்தும், உன் அப்பா: அவர்களுடைய வாக்கு மீறி நடக்கக்கூடாதென்ற பயத்தினால், வாய் மூடிக்கொண் டிருந்தார்கள். இனி உலைவாயை மூடினும், ஊர் வாயை மூட யாரால் முடியும்? இனி என்ன செய்யலாம்? கண்மணி! இக்காலத்தில் ஓர் உபாய மிருக்கிறது. அதை தக்கபடி கையாடினால், பிறந்த குடும்பத்தாருக்கு உலகம் உள்ள வரையில் உயர் பதவியும், உதகிருஷ்டப் பெயரு முண்டா கும்' என, இராஜகுமாரி இந்தச் சங்கதிகளை அழுத கண்ணு டனும், சிந்திய முக்குடனும் கேட்டு, " அன்பே அவ தாரமாக வந்த தாயே! இந்தக் கஷ்டகாலத்தில் தாங்கள் சொல்லுகிறபடி நடக்கச் சித்தமாக இருக்கிறேன்" என,