பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் முகம் கவர்ன்மெண்டின் கடமையாக விருக்கிறது. ஆயிசம் குதிரை சக்தி மின்சாசத்தை உபயோகத்துக்குக் கொண்டுவருவ தால், கவர்ன்மெண்டுக்கு வருஷத்தில் லட்சம் ரூபாய் கிஸ்தி கிடைக்கக் கூடிய துடன, 10 லட்சம் ரூபாய் பெறுமான முள்ள சாக்கைத் தொழிற்காரர்கள் செய்து முடிக்கக்கூடும். சென்னை மாகாணத்தின் நீர்ப்பாய்ச்சல், இப்படிக் காவிரி நீரை மைசூரில் தேக்கிவிடுவதால் தஞ் சாவூர் திருச்சினாப்பள்ளி ஜில்லாக்களின் நீர்ப்பாய்ச்சலுக்கு என்ன கேரிடக்கூடு மென்பதைப்பற்றி மைசூர் சீப் எஞ்சி னீர் ரிபோர்ட்டில் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது. தஞ்சை திருச்சி ஜில்லாக்களில் இப்பொழுது 10 லட் சத்து 65 ஆயிரம் ஏகராவும், மைசூரில் ஒரு லட்சத்து எண் னாயிரம் ஏகராவும் காவிரி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப் படுகின்றன. ஆகையினால் பிரிட்டிஷ் ஜில்லாக்களில் எவ்வ ளவு விஸ்தீரணம் சாகுபடி செய்யப்படுகிறதோ அதில் ஒன் பதில் ஒரு பங்குக்குக் குறைவாகவேதான் பை சூரில் சாகு படி செய்யப்படுகிறது. ஆனால் ஆற்றில் ஒரு வருஷத்தில் எவ் வளவு ஜலம் போகிறதோ அதில் முக்கால்பங்கு ஜலம் ஆறு வாரூர் காட்டைக் காண்டும் போது அதிலிருக்கிறது. பைசூர் சமஸ்தானத்தில் எவ்வளவு விஸ்தீரணமுன் பூமி யில் பெய்த மழை காவிரியில் விழுகிறதென்று கவனித்தா லும் சரி, அவலது இந்த நாட்டின் வழியாக அது எவ்வள ஜலத்தைக் கொண்டு போகிறதென்று கவனித்தாலும் சரி, அதில் போகிற அதிகப்படி ஜலத்துக்கு மைசூர் சமஸ் தானத்துக்குத்தான் முதல் பாதயம். ஆயினும், சென்னை சுவர்ன்மெண்டார் 3 வட்சத்து 30 ஆயிரம் ஏகரா பூமியைப் புதிதாகச் சாகுபடிக்குக் கொண்டு வரும்படி எண்ணாயிரம் கோடி கன அடி. பிடிக்கக் கூடிய ஒரு தேக்கத்கைக் கட் டக் திட்டம் போட்டிருப்பதால், அதில் பாதியளவுள்ள ஒரு தேக்கத்தை மைசூர் கவர்ன்மெண்டார் கட்டுவதில் ஆ-சேபனை இருக்க முடியாது என்று மைசூர் ரிபோர்ட் டில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலே சொல்லியுள்ள விபரங்களைக் கொண்டு மைசர் கவர்ன்மெண்ட்டின் யோசனை விளங்கும். 253 லட்சம் பருபாய் செலவிட்டு, ஒன்றரை லட்சம் ஏகரா பூமியைச் சாகு படிக்குக் கொண்டு வரவும், சிவசமுத்திரத்தில் 5000