பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை (3) பாண்டிய நாடு (மதுரை, திருநெல்வேலி, ஜில்லாக்கள்) ஸ்தலங்கள் 14. (4) மலை நாடு (மலையாளம் ஜில்லா) ஸ்தலம் 1. (5) கொங்குநாடு (சேலம் கோயமுத்தூர் ஜில்லாக்கள்) ஸ்தலங்கள் 7. (6) நடுநாடு (தென்னாற்காடு ஜில்லா) ஸ்தலங்கள் 22, (7) தொண்டை நாடு (செங்கற்பட்டு, வட ஆற்காடு ஜில்லாக்கள்) ஸ்தலங்கள் 32, (8) துளுவநாடு (தென்கன்னடம் ஜில்லா) ஸ்தலம் 1. (9) வடநாடு (ஹிமோத்கிரி கண்டம்) ஸ்தலங்கள் 5. ஆக சிவஸ்தலங்கள் 274. என்று சொல்லப்பெற்றிருக்கிறது. ஆனால், சில கிரந்தங்களில் 1008 சிவஸ்தலங்களென்று சொல்லப் பெற்றிருக்கிறது. இந்த 1008-ல் 274 போக, பாக்கி 734 ஸ்தலங்கள் மறைந்திருக்கும் இடங்கள் தெரியவில்லை. மேலும், 274 ஸ்தலங்களில் பாடல் பெற்ற ஸ்தலங்களும் பாடல் பெறாத ஸ்தலங்களும் சேர்ந்திருக்கின்றன, நிற்க, இனி வைணவ ஸ்தலங்களின் விவரங்களை இதனடியிற் கண்ட கவிகளில் காணலாம். அஷ்டசுயம்பு ஸ்தலங்கள். "சுயம்புத் தலங்கள்வை ணவக்ஷேத்திரத்திற் சொல்லிய விருநான் காகுஞ் சாளக்கிராமம் நயமுள்ள வானமா மலை திருவ ரங்கம் நைமிசா சணியமும் வதரியாச் சிரமம் புயங்கபூ ஷணர்வாழும் வேங்கடமா மலையும் புட்காமும் ஸ்ரீமுஷ்ண மெனவெட்டு மிவற்றுள் வயங்குமிறு தியில்ரெண்டு தலங்களாழ் வாரால் மங்களா சாசனமி லாதவவை தாமே." மங்களாசாசனத் தொகை. “திருநாட்டி லொன்றுபனி ரெண்டுவட பதியிற் றிகழ் தொண்டை யிருபானி ரெண்டுமக தத்தின் மருவுதல மிரண்டாஞ்சோணாட்டுவட கரையில் வளரிருபத் தானுந்தென் கரை தனிலீ சேழுந்