பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தஞ்சை (வல்லம்), ஆகியவை இம்மாவட்டத்தைச் சேர்ந் தவையே ஆகும். சோழர்க்குப்பின் தஞ்சையை ஆண்ட நாயக்க மகாராஷ்டிர மன்னர்களும் இம்மாவட் டத்துக்கு நிலைத்த புகழை நல்கியுள்ளனர். ஐரோப்பியர் களில் போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், டேனிஷ்காரர், ஆங்கிலேயர் ஆகிய பல நாட்டினரும் இம்மாவட்டத்தில் வணிகராகவும் சிறுசிறு பகுதிகளில் சிலகாலம் ஆட்சியாளராகவும் இருந்திருக்கின்றனர். நாட்டு வளம் நீர்வளம் இன்றேல் நாடு செழித்து நல்வாழ்வு வாழ இயலாது."வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் கடற் காவிரி" மைசூரைச் சேர்ந்த குடகுநாட்டில் தோன்றி இடையிலுள்ள சிற்றாறுகளின் நீர்களையெல்லாம் தன்பால் ஈர்த்துப் பேராறாகித் தஞ்சை மாவட்டத்துள் நுழைந்த தும் பல கிளையாறுகளாகவும், வாய்க்கால்களாவும் இம் மாவட்டத்தில் 40,000 கி.மீ. (25,000 மைல்) நீளத்துக்குச் சென்று பிரிந்து மனித உடலுக்கு இரத்தம் செலுத்தும் இரத்தக்குழாய்களைப்போல அமைந்து மாவட்ட மண் ணுக்கு வற்றாத வளம் வழங்கும் வண்டலையும் நீரையும் வரையாது தருகிறது. இதனால், "மலையாளம் பேய்ந்து விளைகிற சீமை; தஞ்சாவூர் பாய்ந்து விளைகிற சீமை" என்ற சொற்றொடரும் ஏற்பட்டிருக்கிறது. காவிரியின் நீர்வளத்தால் தஞ்சை மாவட்டம் சோறு டைத்த சோழ வளநாடாக ஆயிற்று. பார்க்குமிடமெல் லாம் பச்சைவயல்கள் அமைந்து அது தமிழ்நாட்டின் நெற் களஞ்சியமாக இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் மூன்று போகம் விளைவுஉன்டு. இம்மாவட்டத்தில் 1960-61 இல் விளைந்த நெல்லின் மதிப்பு நாற்பதுகோடி ரூபாய் ஆகும். தமிழ் நாட்டில் நெல் அறைக்கும் இயந்திரங்கள் கூடுத லாக உள்ள மாவட்டம் இதுவேயாகும். கரும்பும் இம்மா