12 செய்து கட்டிடக் கலைக்கு இலக்கியமாக அமைந்த கோவில்களும் இம்மாவட்டத்திலுள்ளன. மங்கள சாச னம் பெற்ற வைணவ ஆலயங்களும் இருக்கின்றன. திருநாங்கூர் என்னும் ஓர் ஊரிலேயே பல வைணவத் திருப்பதிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பங்காரு காமாட்சியும் ஒரே கல்லாலான பெரிய நந்தியும் தஞ்சை மாவட்டத்திலுள்ளன. தேவாராம் பாடிய ஞானசம் பந்தரும், நாயன்மார், ஆழ்வார் ஆகியோரில் பலரும் இம்மாவட்டத்தினரே ஆவர். சைவ, வைணவ ஆதீனங் களும் இம்மாவட்டத்தில் போலப் பெருந்தொகையாக வேறு எங்கும் இல்லை. பௌத்தவிகாரங்கள் இம்மாவட்டத்தில் ஒரு காலத் தில் வேரூன்றியிருந்தன. சமணர் கோவில்கள் ஓரிரு இடங்களில் இன்றும் உள்ளன. கிறித்தவம் தமிழ் நாட் டின் பெரும்பகுதியில் புகுந்தது தஞ்சை மாவட்டத்தின் வழியேயாகும். கத்தோலிக்கருக்குப் புனிதமான வேளாங் கண்ணி ஆரோக்கியமாதா கோவில் இம்மாவட்டத்தில் இருக்கிறது. பிராடஸ்டண்டு சமூகத்தின் பெரிய பிஷப் திருச்சிராப் பள்ளியில் இருந்த போதிலும் இவரது பட் டப்பெயர் இன்றுங்கூட "தரங்கம்பாடி, பிஷப்' என்றே வழங்கி வருகிறது. தரங்கம்பாடி, கிறித்தவர்களுக்குத் தமிழ் நாட்டின் வாயிலாக இருந்தது; நாகப்பட்டினம் இஸ்லாமிய மதத்துக்குத் தமிழ் நாட்டின் தலைவாயிலாக இருந்தது. மாவட்டக் கடற்கரையெங்கும் முஸ்லிம்களைக் காணலாம். நாகூர் கந்தூரி நனி சிறந்த திருவிழாவாக நடப்பதை அறியார் யார்? கலைப் பெருமை நாகரிகம் என்பது வறுமை இன்னதென அறியாத மக்கள் கல்வியின் பயனை அனுபவித்தும் கலையின்பத்தில் மூழ்கியும் வெற்றிலையும் சீவலும் போட்டுத் திண்ணையில்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை