பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 உட்கார்ந்து ஆற அமர அரட்டையடிப்பது என்று சொல் லத் தோன்றுகிறது. இசை, நாடகம், ஓவியம், சிற்பம், நடனம் முதலிய ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஆதரித்த அருமை தஞ்சை மாவட்டத்துக்கு மட்டுமே உரிய தனிப்பெருமை. வாணிகப் பெருக்கத்தால் போக்குவரத்து வசதிகள் பெருகியுள்ளன. பட்டினப்பாலை பாடப்பட்ட காலத் திலேயே சோழநாடு கடல் வாணிகத்தில் தலைசிறந்து விளங்கிற்று. தமிழ் நாட்டில் கடற்கரையின் நீளம் தஞ்சை மாவட்டத்திலேயே கூடுதலாக இருக்கிறது. சிறு துறைமுகங்களும் ஏராளமாக உள்ளன. கங்கைச் சமவெளி நீங்கலாக இந்தியாவில் வேறு எங்கும் இம் மாவட்டத்திற்போல மிகுதியான இரயில்பாதைகள் இல்லை. மக்கள் நெருக்கத்தாலும் நெல் ஏற்றுமதியாலும் இரண்டு கிலோமீட்டருக்கொரு இரயில் நிலையம் இருக் கிறது. பகலில் இம்மாவட்டத்தில் இரயில் பயணம் செய் பவர்க்கு இது எளிதிற் புலனாகும். சென்னை நகர்க்கு வெளியே தமிழ் நாட்டில் இரயில் பாதை முதலிற் போடப் பட்டது இம்மாவட்டத்திலேயே ஆகும். உப்பு ஏற்றுமதிக் காக உப்பளப் பகுதியில் வேதாரணியம் கால்வாய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தொண்டு வட்டத்துத் தமிழ்மொழிக்கு அச்செழுத்து ஏற்பட்டது இம்மா தரங்கம்பாடியிலேயே ஆகும். இயற் றமிழுக்கு அணி செய்திருக்கும் புலவர் பலர் இம்மாவட் டத்தவரே ஆவர். இசைத்தமிழுக்கு ஏற்றம் தந்தவர்கள் நடனக்கலையைப் பரப்பியவர்கள் ஆகியோர் அனைவரும் இம்மாவட்டத்தினர் என்று கூறினும் குற்றமில்லை. உலகம் வியக்கும் நடராசர் வடிவம் போன்ற அரிய செப்புப் படிமங்கள் தொடங்கித் தஞ்சாவூர்த் தலையாட்டு