15 மருந்துக்கும் இல்லை. காட்டுவளம் மிகமிகக் குறைவாக இருக்கிறது. சத்திரங்கள் நிறைந்திருப்பதும், கோயிலை ஒட்டிப் பல ஊர்கள் உண்டாகி யிருப்பதும் இம்மாவட்டத்தின் பிற சிறப்புக்களில் சில. மராத்தி மொழியைத் தாய் மொழியாக உடைய மக்கள் தொகுப்பாக வாழுவதும் தமிழ்நாட்டில் இம்மாவட்டத்தில் மட்டுமேயாகும்; தஞ் சாவூர் ரசம் முதல் தயிர்க்கோலா வரை தயாரித்துத் தமிழரின் உணவுக்குச் சுவையூட்டியிருப்பது மராத்திய ரின் தொண்டுகளில் ஒன்று. தமிழ் நாட்டின் வரலாற்றில் நல்லிடம் பெற்றிருப்ப தோடு தமிழ் மக்களுக்கு அமுதூட்டியும் வரும் இம்மா வட்டத்தைப் பற்றிய விரிவான செய்திகளை அடுத்துவரும் பக்கங்களில் தெரிவிப்போம். 2. கனி வளம் எண்ணெய் தஞ்சை மாவட்டம் கனிவளம் நிரம்பியது என்று நெடுங்காலமாக ஒருவரும் கருதவில்லை. ஆனால் தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்திலும் கனிவளத்தைப் பற்றிச் செம்மையான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. இதற்கென ஓர் தனித் துறையை விரிவான முறையில் அமைக்கத் தமிழ் நாடு அரசாங்கம் 1961-இல் தான் முன்வந்திருக்கிறது; ஆராய்ச்சி வேலை முற்றுப்பெற 25 ஆண்டுகள் (1986 வரை) ஆகக்கூடுமென்று தொழில் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டசபையில் சட்டசபையில் கூறியுள் ளார். இந்திய அரசாங்கத்துக் கனிவள ஆராய்ச்சித் துறையினர் செய்த மேற்போக்கான ஆய்வில் தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோல் எண்ணெய் இருப்பதாக ஊகித்தனர்; அதன் விளைவாக 1958 முதல் இந்திய அர
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை