16 சாங்கத்து எண்ணெய்-எரிபொருள்-குழுவினர் (ONGC) இதைப் பற்றி ஆராயும் வேலையை மேற்கொண்டுள்ளனர். Y. R. பானு இக் குழுவின் மூர்த்தி என்பவர் ஆராய்ச்சியாளர்கள் க். தலைமையில் மன்னார்குடி, மாயூரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நன்னிலம் வட்டங்களில் ஆய்ந்துள்ளனர். (Gravity and Magnetic Investigations) இவர்களுடைய அறிக்கை குறிப்பிடும் இடங்களில் 'போரிங்' போட்டு Seismic Survey நடத்துவதற்குரிய அறிஞர்கள் வரவழைக்கப்படுவார்கள். 1961 இறுதிக்குள் மேலுஞ் சில விவரங்கள் கிடைக்குமென்றும் அதற்குப் பிறகு தோண்டுகுழாய் போடுவது பற்றி முடிவுசெய்யப் படுமென்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி முதல் தொண்டி வரையிலுள்ள கடலோ ரப் பகுதியில் எண்ணெய் இருக்கும் என்ற கருத்தைக் கனிவள அறிஞர் டாக்டர் எம். எஸ். கிருஷ்ணன் 1940 இலேயே தெரிவித்தார். 1952 இல் நெய்வேலிப்பகுதி யில் பழுப்பு நிலக்கரியை ஆராய்ந்த கனிவளக் குழுவினர் அங்கே 8000 அடி ஆழத்தில் எண்ணெய் இருக்கும் என்று கூறினர். சிதம்பரத்துக்கு அருகே 1500 - 2000 அடி ஆழத்திலும் இன்னும் தெற்கே காரைக்காலிலிருந்து சிவகங்கை வரை கடலோரத்தில் 160 கி. மீ. நீளம் - 30 கி.மீ. அகலமுள்ள பகுதியிலும் எண்ணெய்ப் படிவங்கள் இருப்பதாயும் இப்பகுதியின் அமைப்பு எண்ணெய்வளம் மிக்க குவாயிட்டின் அமைப்பை ஒத்தது என்றும் அறிஞர் கூறுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் எண்ணெய் தேடும் முயற்சி யில் முனைய அமெரிக்காவிலுள்ள காண்டினண்டல் ஆயில் கம்பெனி முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. இம்முயற்சிகள் வெற்றி பெற்றால் தமிழ் நாட்டின் வளம் பல்கிப் பெருகும். தொழில் வளர்ச்சியின் அடிப்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை