பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காவி, இரும்புப் படிவங்கள் வல்லத்திற்கு மேற்கேயுள்ள பகுதிகளில் மஞ்சள் காவியும், காவிரிக்குத் தெற்கே திருச்சி மாவட்ட எல்லை யருகே 'சோடா'வும் (Deposits of Soda) கிடைக்கின்றன. வல்லம் பகுதியில் இரும்புப் படிவங்கள் காணப்படு கின்றன; இங்கு கிடைக்கும் ஒருவகைக் கல் (வல்லம்) வயிரம்) மூக்குக் கண்ணாடி செய்யப் பயன்படுகிறது. ஜிப்சம் நாகூர்ப் பகுதியருகே மட்டமான ஜிப்சம் கிடைக் கிறது. மண்வளமுள்ள படுகைகளில் சுண்ணாம்புக் கல் லும், கந்தர்வகோட்டை, வல்லம் பகுதிகளில் சரளைக் கல்லும், பட்டுக்கோட்டை வட்டத்தில் கடலூர்க் கெட்டி மண்ணும் காணப்படுகின்றன. கடலூர் கெட்டிமண் என்பது பழுப்பு நிலக்கரி முதல் தொழில் வளத்துக்கு வேண்டும் பலவகைக் களிமண்கள் வரை தன்னகத்தே அடக்கியுள்ள ஒரு பொருள் ஆகும். 3. காட்டுவளம் தமிழ் நாட்டு மாவட்டங்களில் காட்டுவளம் மிகக் குறைவாக உள்ள மாவட்டம் தஞ்சையே ஆகும். குறிப்பிடத் தக்க காடு, திருத்தருப் பூண்டி வட் டத்தில் கோடிக்கரைக்கு அருகேயுள்ள கோடியக் காடு என்பதாகும்; இதன் பரப்பு 4,500 ஏக்கர். இங்கு வரையாடு (Black Buck) என்ற ஒருவகை மான் 1900 ம், புள்ளிமான் 2007-ம் இருப்பதாகக் கணக்கிடப் பட்டிருக் கிறது. இந்தக் காட்டில் காடு வாழ் உயிரினக்கூடம் ஒன்றை மூன்றாம் திட்டக் காலத்தில் அமைக்க அரசாங்கம் மூடிவு செய்திருக்கிறது.