பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வருகிறது; இப்பகுதி முந்திரி ஆராய்ச்சி நிலையம் ஏற்படு வதற்கு ஏற்ற இடம் ஆகும். யறவைச் செல்வம் நாரை போன்ற ஒருவகைப் பறவை (Flamingo) இம் மாவட்டத்துக் கோடிக் கரையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நூற்றுக் கணக்கில் தங்குகிறது. இது சிவப்பு நிறமும், அழகிய தோற்றமும் உடையது; நான்கு அடி உயரம், நீண்டு சுருங்கிய கால்கள், குழாய் போன்று வளைந்த கழுத்து, ஆர அமர உண்ணும் தன்மை, ஒற்றைக் காலில் நின்று கொண்டே உறங்கும் ஆற்றல்-இத்தகைய இயல்புகள் நிறைந்தது இப்பறவையினம். கோடிக்கரையில் கடலோ ரத்திலுள்ள நண்டு இனங்களின் சாற்றைக் குடிக்க இவை இங்கு வருகின்றன. உலகில் ஒரு சில நாடுகளி லேயே இவ்வினம் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுவர். தனிச்சிறப்புக்குரிய பிற பறவைகளும்* கோடிக்கரைக்கு வருகை புரிகின்றன. விலங்கு நூல் மாணவர் இவற்றைக் காண்பது நலம் பயக்கும். 4.வரலாறு தஞ்சையின் வரலாறு சோழர் வரலாற்றுடனேயே தொடங்குகிறது. சோழ மன்னர்கள் சங்ககாலச் சோழர், இடைக் காலச் சோழர் பிற்காலச் சோழர் என மூவகைப் படுவர். சங்ககாலச் சோழர் சங்ககாலச் சோழர் எப்போது தோன்றினர், அவர் களுள் முதல்வர் யார் என்பன போன்ற வினாக்களுக்கு

  • Green-winged Meal

Blue-winged Meal Laughing gulls Sandpipers Ployers little Stints Curlew Indian Pittas