பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 முடிந்த முடிபாக ஒரு விடையும் கூறுதற்கில்லை. வரலாற்று நூலோர்க்கு ஓரளவு தெரிந்த சோழன் கி. பி. 50 முதல் 95 வரை ஆண்ட கரிகாலன் என்பான். கரிகால னுக்கு முன்னர்ப் பத்துச் சோழர்கள் ஆட்சி புரிந்ததாக. வும் மநுநீதிச் சோழன் அவருள் ஒருவன் என்றுங் கூறுவர். கரிகால் சோழன் சேர பாண்டியரை வென்றவன்; தெற்கே ஈழநாடு வரையும் வடக்கே நெல்லூர் வரையும் தன் செல்வாக்கை நிலைநாட்டியவன்; கல்லணையைக் கட்டியவன்; காவிரிப்பூம்பட்டினத்தைத் தொழிலும் வெளிநாட்டு வாணிகமும் சிறந்த நகராக்கியவன். பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலிய பழமையான இலக்கியங்கள் இவன் புகழை இயம்புகின்றன. இவன் வரலாற்றை, சுத்தானந்த பாரதியார் பாடியுள்ள பின்வரும் பாடல் சுருங்கக் கூறுகிறது. “கடற்படை கொண்டிலங்கை வென்று தக்கணத்தைக் கைப்பற்றி வங்கர்கோ சலரைவென்று வடநாட்டார் அடிபணிய வன்போர் செய்து, வாகையுடன் புலிக்கொடியை யிமயமேற்றி அடற்கரிய தமிழ்வீரப் படையால் பொன்னி அணைகட்ட மன்னர்பணி கொண்ட மன்னன் சுடர்மணிப் பூம்புகா ராண்ட கரிகாற் சோழன் துலங்கிய நன்னாடுதித்த சூரச்செய்கோன்". கரிகாலன் இமயமலைவரையும் சென்று, அங்கே சோழரின் புலி இலச்சினையைப் பொறித்ததாக வரலாற்று நூலோர் கூறுவர். அவன் இமயத்தில் புலி பொறித்த. இடம் டம் சிக்கிம், பூட்டான் எனப்படும் சிறு நாடுகளுக்கு இடைப்பட்ட மலைப்பகுதி என்று ஆராய்ச்சியாளர் மு. இராகவ ஐயங்கார் குறித்துள்ளார். அந்த இடத்தில் "சோழன் மலை", "சோழன் கணவாய்" என்ற பெயர்கள்