பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 விளைவாக, பிற்காலச் சோழரின் பெருமைக்கும் அடிகோலினான். மேன்மைக்கும் இவன் தஞ்சையைத் தலைநகராக்கிக் கொண்டான். இதுமுதல் 1279-வரை சோழர் பெருமையும் தஞ்சை நகரின் புகழும் வளர்பிறை போல் வளரலாயின. விஜயாலயச் சோழன் மகனாகிய ஆதித்தச் சோழன் திருப்புறம்பயம் போரில் பாண்டியரைத் தோற்கடித் தான். அவன் மகனாகிய பராந்தகன் 907 முதல் 953 வரை புகழுடன் ஆண்டு சோழப் பேரரசுக்கு வழி வகுத் தான். இவனுக்குப் பிறகு ஆண்டவர்களுள் கண்டாராதித் தனும் பல திருப்பணிகள் செய்த அவன் மனைவி செம்பியன் மாதேவியும் முக்கியமானவர்கள். சோழப் பேரரசருள் தலைசிறந்தவன் முதலாம் இராஜராஜன். இவன் ஆட்சிக் காலம் 985 முதல் 1014 வரையாகும். இவன் காலமும் இவன் மகனான முதலாம் இராஜேந் திரன் என்ற கங்கைகொண்ட சோழன் காலமும் தமிழ் மக்களின் பொற்காலம் எனச் சிறப்பிக்கத் தக்கன. அந் நாளில் சோழப் பேரரசு, "வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும் குடதிசை மகோதையும், குணதிசை கடாரமும்" என விரிந்து பரந்து கிடந்தது. முதலாம் இராஜராஜன் தன் தலைநகரமாகிய தஞ்சை யின் சிறப்பை உயர்த்தினான். திட்ப நுட்பம் வாய்ந்த இந்தியச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றும் நிலைத்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை 1009-இல் கட்டினான். தில்லைக் கூத்தனுக்குப் பொன் முகடு வேய்ந் தான். தில்லையிலிருந்த சைவத்திருமுறைகளை நம்பி