பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 மாநகரின் முக்கியத்துவம் குறைந்தது. 1911இல் இந்தி யத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப் பட்டமையால் கல்கத்தா பொலிவும் செல்வாக்கும் இழந் ததை ஒப்பிட்டுப் பார்த்தால் தஞ்சை நகருக்கேற்பட்ட ஊறு உணரத்தகும். கங்கை கொண்டான் என்ற பட்டம் இம்மன்னனுக்கு உண்டு. தமிழ்நாட்டில் பல கோயில்களின் மண்டபங் களுக்குக் 'கங்கைகொண்டான் மண்டபம்' என்று இன்றும் பெயர் வழங்கிவருவது தமிழ் மக்கள் இம்மன்னனைப் போற்றுவதற்கு அடையாளமாகும். ற செயங்கொண்டான், கடாரங் கொண்டான். என் ஊர்களையும் இவன் உண்டாக்கினான். இவன் தோற்று வித்த செயங் கொண்டச் சோழபுரம் இவனுடைய போர் வெற்றிகளை நினைவூட்டுவதாகும். இராஜேந்திரன் தன் கடற்படை வலுவால் மலேயா நாட்டின் நில பகுதிகளைக் கைப்பற்றிக் "கடாரம் கொண்ட சோழன்" ஆயினான். சோழப் பேரரசைப்பற்றி, இக்காலத்தில் உலகப் பேரரசருள் ஒருவர் போல உள்ள ஜவஹர்லால் நேரு உலக வரலாற்றுக் கடிதங்கள்" என்னும் நூலில் பின் வருமாறு எழுதியுள்ளார்.

"சோழப் பேரரசு வலிமையடைந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் நிகரின்றி விளங்கியது. சோழர்கள் கடல் ஆதிக்கம் உள்ளவர்கள். அவர்களுடைய பெரிய கடற் படை அரபிக் கடலிலும் வங்காளக் குடாக் கடலிலும் பெருமிதமாக உலவி வந்தது. அவர் களுடைய தலையாய துறைமுகம் காவிரி ஆறு Maldives ลง