28 சென்றான். தமிழ்நாடு என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிடப்பெற்ற ஒரு நிலப் பகுதி - இன்று நாம் வாழும் தமிழ்நாடு என்ற பகுதியை மட்டுமே- கொண்ட தனி அரசியல் அமைப்பு ஒரு குடையின்கீழ் உருவானது இவன் காலத்திலேயே ஆகும். வரை ஆண்ட முதற் குலோத்துங்கனுக்குப் பிறகு 1150 இரண்டாம் குலோத்துங்கனும் 1178 முதல் 1218 வரை மூன்றாம் குலோத்துங்கனும் சோழநாட்டை அரசருள் முக்கியமானவர்கள். மூன்றாம் குலோததுங்கன் கும்பகோணத்துக்கு அருகேயுள்ள திரிபுவனத்தில் சிவன்கோயில் அமைத்த சிறப்புக் குரியவன். மண்டலம், கூற்றம், ஊர் என்று பெரியதும் சிறியது மான பல பிரிவுகளாகச் சோழநாடு பிரிக்கப்பட்டது. ஆங்காங்கு அமைக்கப்பட்ட சபைகளின் மூலமாகவும் அரசாங்கக் கண்காணிப்பாளர் மூலமாகவும் அரசாட்சி இயங்கியது. தலைவன் என்ற முறையில் அவ்வப்போது அரசன் நாட்டைச் சுற்றி வந்து, ஊர்க்கோயில் மண்ட பங்களில் தங்கி, இந்தச் சபைகளின் காரியங்களைக் கண்காணித்து வந்தான். கிராமச் சபைகள் வரிகள் விதித்தன. கிராமக் கோயில்களையும், ஏரிகளையும், நீர்ப்பாசன வசதிகளையும் இன்னும் இத்தகைய பல அரசியல் விஷயங்களையும் கவனித்து வந்தன. கிராமச் சபைகள் பொதுத் தேவைக்கு வேண்டிய பணத்தைக் கோயில் சபையிடம் கடன் வாங்கும் பழக்கம் அக்காலத் தில் இருந்தது. அங்காடிக்குழி" என்ற (இக்காலத்திய விற்பனைவரி போன்ற) ஒரு வரியைக் கிராமத்தாரிடம் வசூலித்து அதை வாங்கின கடனுக்கு வட்டியாக அளித் ததாகக் கல்வெட்டுக்கள் உள்ளன. கிராமச் சபைகளில் வயதுவந்த ஆடவர் அனைவரும் உறுப்பினராக இருந்த போதிலும் ஆட்சி அலுவல்களை அன்றாடம் கவனிக்கச் செயற்குழு ஒன்று குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை