பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாயக்கர் பரம்பரையில் கடைசியாகத் தஞ்சையை ஆட்சி செய்த இம்மன்னரே இப்போது நாம் தஞ்சையில் காணும் அரண்மனைக் கட்டடங்களையும் * மாயூரத்திலுள்ள பூசை மண்டபத்தையும் திருவிடை மருதூரில் வீரசோழன் ஆற்றங்கரையிலுள்ள அழகான மண்டபத்தையும் திருவரங்கநாதனைத் தஞ்சையிலிருந்தே தொழுவதற்கு 12 அடுக்கு மாளிகையும் கட்டினான். மதுரைமன்னனும் ரகுநாத நாயக்கருக்குப்பின் பீஜப்பூர் சுல்தானும் தஞ்சை நாயக்கருக்குத் தங்களால் இயன்ற தொல்லைகளெல்லாம் கொடுத்தனர். மதுரைச் சொக்கநாத நாயக்கர் 1673-இல் தஞ்சையைத் தாக்கி, தம்பி அழகிரியிடம் ஒப்புவித்தார். மன்னார்குடி ராஜ கோபாலசாமி கோயில் திருப்பணி செய்த விசயராகவ நாயக்கருடன் தஞ்சை நாயக்கர் பரம்பரை மறைந்தது. அழகிரி ஆண்டபோது அமைதி நிலவவில்லை; குழப் பங்கள் குறையவில்லை. ஆட்சி சீர்குலைந்ததை அறிந்தவர் கள் அந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டனர். வீர சிவாஜியின் இளவலும் பீஜப்பூர் வீரனுமான எக்கோஜி 1676-இல் பட்டத்துக்கு வந்தான். இதுமுதல் மஹா ராஷ்டிர மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. மராத்தியர் ஆட்சியில் தஞ்சைச்சீமை தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னனார்குடி, மாயூரம், கும்ப கோணம், திருவாடி என்ற ஆறு சுபா க்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு சீமையும் பல மாகாணங் களைக் கொண்டதாகவும் ஒவ்வொரு மாகாணமும் பல சிற் றூர்களைத் தன்னகத்தே உடையதாகவும் இருந்தது.

இம்மாளிகை இன்று அரசாங்க உடைமையாக இருக் கிறது. பொதுப்பணித் துறையினர் இக்கட்டிடங்களைப் பேணி வருகின்றனர். சரபோசி வழியினரான தஞ்சை இளவரசர்களுக்கு இவ்வரண்மனையில் சில பகுதிகளில் வாழும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.