பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அறிவுக்கூடம் என்ற நிலைக்கு உயர்த்தியவன் இவனே ஆவான். புதிய சத்திரங்கள் பலவற்றைக் கட்டினான். பழைய சத்திரங்களுக்கும் அறக்கட்டளைகள் அமைத் தான். இவனுடைய சத்திரங்களில் இந்நாளில் சில நாடு களில் அரசாங்கங்கள் மேற்கொள்ளும் பொது மக்களின் நல்வாழ்வுக்கான அறச்செயல்கள் நடைபெற்றன. சரபேசிக்குப்பின் இவன் மகன் சிவாஜியின் ஆட்சி நடைபெற்றபோதிலும் அதிகாரம் யாவும் பிரிட்டிஷா ரிடம் இருந்ததால், அவனுக்கும் அவன் வழிவந்தவர்க்கும் ஒரு லட்சம் பகோடாக்கள் "அலவன்சு" கொடுக்கப் பட்டு வந்தது. இன்றும் தஞ்சை இளவரசர்களுக்குச் சிறுதொகைகள் இந்திய அரசாங்கத்தால் அலவன்சு" ஆக வழங்கப்படுகின்றன. 1806 முதல் 1813 வரை, அதாவது பிரிட்டிஷ் ஆட்சி செம்மையாக அமைவதற்குமுன், தஞ்சை மாவட்டத்தில் குழப்பமும் கொள்ளையும் கொலையும் நிகழ்ந்தன. வலு வான சமூகங்கள் வைத்ததே சட்டமாக இருந்தது. கொள்ளைக்காரர்களை அடக்க உதவியவர்களுக்குப் பிரிட்டிஷார் ஆதரவு காட்டி அவர்களைப் பெருநிலக்கிழார் ஆக்கினர். தஞ்சை அரசர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள் கொள்ளைக்கூட்டத்தினரிடமிருந்து கைப்பற் றப்பட்டன. அவற்றை இன்றும் சென்னை நகரில் கன்னி மரா காட்சி நிலையத்தில் காணலாம். இராமலிங்க படை யாச்சி என்ற பயங்கரக் கொள்ளைக்காரனை உக்கடைத் தேவர் குடும்பத்தில் வாழ்ந்த வேங்கடாசலத் தேவர் அடக்கினார். அவரைப் பாராட்டி கவர்னர் எல்பின்ஸ்டன் பிரபு உக்கடைத் தேவர் குடும்பத்துக்கு வீரச்சங்கிலி ஒன்றை அன்பளித்தார். இதுபோன்ற பல செயல்களால் அமைதியை நிலைநாட்டி, பிரிட்டிஷார் ஆட்சியை மேற் கொண்டனர்.