35 குறைந்தது. அதன் விளைவாக, இரயில்வேத்தொழிற்சாலை யும் கல்லூரிகளும் கிறித்தவ மதக்குகுக்களின் தலைநகரும் தஞ்சைமாவட்டத்திலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டன. 1860 இல்தான் தஞ்சை கலக்டரின் தலைநகரமாயிற்று. 1910-இல் தஞ்சையில் வட்ட அலுவலகம் ஏற்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியில் சில காலம் இருந்து நீக்கப்பட்ட கோட்ட ஆட்சி அலுவலகம் உரிமைபெற்ற இந்தியாவில் தான் மீண்டும் திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் தஞ்சைக்கு ஏற்பட்ட பெரிய நன்மைகள் இரயில் போக்குவரத்துப் பெருக்கமும், கல்லணையைத் திருத்தியமைத்தும், மேட்டூரில் அணை கட்டிப் புதிய கால்வாய்கள் வெட்டியதுமாகும். சோழ, நாயக்க, மஹாராஷ்டிர மன்னர்களால் இனாமாக வழங் கப்பட்ட நிலங்களை மலிவாக வாங்கியும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆதரவாலும் புதிய நிலச்சுவான்தார்கள் தோன்றினர். பல்லாயிரம் வேலி நிலங்கள் உடையவராக இருந்தமையால் இவர்களுடைய செல்வாக்கு அளவு கடந்திருந்தது. பிரிட்டிஷ் வணிகரின் வருவாய்க்காக, கோடிக்கரை - காங்கேசன்துறை துறைமுகங்களுக் கிடையே நெடுங்காலமாக இருந்துவந்த சிறுகப்பல் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது, இதே கார ணத்தால், பர்மா அரிசி தஞ்சைத் துறைமுகங்கள் வழி யாகத் தமிழ் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, தஞ்சை அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கும்வரை, தஞ்சை அரிசிக்குத் தக்கவிலை கிடைக்கவில்லை. உழுதவன் கணக்குப்பார்த் தால் உழக்கும் மிஞ்சாது என்பதைத் தஞ்சை மக்கள் உணர்ந்தனர். பொருளாதார மந்தமும் சேர்ந்து கொண் டது. 1941 இறுதியில் இரங்கூனுக்கும் இந்தியாவுக்கும் போக்குவரத்து அறுந்து போனதாலும் போர்ப் படைகளுக்கு உணவு அனுப்ப வேண்டியிருந்ததாலும்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை