பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாண்டையார் தொண்டை நாட்டிலுள்ள வண்டலுரே வண்ட நாடு என்றனர் V. கனகசபைப் பிள்ளை (Indian Antiquary). அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணத்திலி ருந்து குடவாசலுக்குப் போகும் பெருவழியிலுள்ள வண்டாழஞ் சேரியே வண்டை நாடு என்பர் (முதற் குலோத்துங்க சோழன் என்னும் நூலில்). ஆனால் சோழமண்டலத்திலும், தொண்ட மண்டலத்திலும் உள்ள உள்நாடுகளில், வண்டைநாடு என்பது கல்வெட் டுக்களில் குறிக்கப்படவில்லை. எனவே அக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. தஞ்சை மாவட்டத்தில், மாயூரம் வட்டத்தில் உள்ள சோத்தமங்கலம், செஞ்சி, மாங்குடி என்னும் இம்மூன்று ஊர்களில் வாழும் வாண்டையார்கள், தங்கள் தங்கள் இல்லங்களை 'பெரிய அரண்மனை' 'சின்ன அரண்மனை' என்று வழங்கி வருவ தோடு, சேரர் கிளையினராகிய அரியலுர்க் குறுநில மன்னர், சோழர் குடியினராகிய பிச்சைவரம் பாளையக் காரர் இவர்களுக்குச் சம்பந்திகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். வண்டைநாட்டு அதிபர் வாண்டையார் ஆவர். இவர் குறுநில மன்னர் குடியினர். தமிழ் நாட்டு மூவேந்தர்க்கு மகட்கொடைக்கு உரியவர். சோழ நாட்டிலுள்ள பாளையக்காரர்கள் இதைக் குடிப்பெயராக வும், கள்ளர் மரபினர் பட்டப் பெயராகவும் கொண்டுள் ளனர். கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலை வனான முதற்குலோத்துங்கச் சோழனுடைய படைத் தலைவன் கருணாகரத் தொண்டமான் வண்டையர் குடி யைச் சேர்ந்தவன். "பல்லவர் கோன் வண்டையர்க்கரசு” என்று அவன் அப்பரணியில் குறிப்பிடப்படுகிறான். பல்லவர்களுக்குத் தலைவனும் வண்டையர்களுக்கு அரசனும் ம் என்பது அத்தொடரின் பொருளாகும்.