பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 6. சமய நிறுவனங்கள் பல சமயத்தினரும் வழிபடும் ஆலயங்கள் தஞ்சை மாவட்டத்தில் நிறைந்துள்ளன. வேறு எந்த மாவட்டத் திலும் இல்லாத அளவுக்கு இங்கே சிறந்த ஆலயங்களைக் காண இயலுகிறது. இவைபற்றி இக்கட்டுரையில் பொதுவாகக் குறிப்பிடுவோம். சைவ சமயம்: தேவார திருவாசகப் பாடல்பெற்ற தலங்கள், கருவூர்த் தேவர் திருவிசைப்பா பெற்ற தலங் கள், அருணகிரியார் திருப்புகழ் பெற்ற தலங்கள் ஆகியவை இம்மாவட்டத்திலுள்ளன. பாடல் பெற்ற ஒரு தலத்துக்குள் உள்ள மற்றொரு கோயிலும் பாடல் பெற்றிருக்கும் காட்சியையும் இம்மாவட்டத்தில் காணலாம். , காரோணங்கள், சப்த விடங்கர் தலங்கள், அஷ்ட வீரட்ட தலங்கள் ஆகியவைகளும் முருகன் தலங்களும் அம்மன் கோயில்களும் (மாவூரில்) கல்கத்தாவில் இருப் பது போன்றகாளி கோயிலும், (திருப்பனந்தாளில்) காசி விநாயகர் கோயிலும் இம்மாவட்டத்தில் இருக்கின்றன. ஆட்சி அடிப்படையில் பார்த்தால் அரசாங்கக் கோயில்கள், தனியார் கோயில்கள், தஞ்சை இளவரச ரின் கோயில்கள், யாழ்ப்பாணத்தாரின் ஆட்சிக்குட்பட்ட கோயில்கள் என்ற பல நிலைகளும் இம்மாவட்டத்தில் உண்டு. அரசியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தால், இம்மாவட்டத்தில் தஞ்சை இளவரசர் தம் ஆளுகைக் குட்பட்ட 90 கோயில்களை-சட்டமோ கிளர்ச்சியோ இன்றி - அரிசனங்களுக்குத் திறந்துவிட்டது குறிப்பிடத் தக்கதாகும். வரலாற்று உணர்ச்சியுடன் சிந்தித்தால், காஞ்சிபுரத்திலிருந்த பங்காரு காமாட்சி என்னும் தங்க விக்கிரகம் அதற்கென ஏற்பட்ட கோயிலில் தஞ்சை மேல ராச வீதியின் வடகோடியில் இருக்கிறது. இக்காமாட்சி