பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தேவபட்டினத்தில் எல்லையம்மன் கோயிலும், கும்ப கோணத்தில் திரௌபதை அம்மன் கோயிலும், தேப் பெருமா நல்லூரில் சுந்தர காளியம்மன் கோயிலும், பட்டுக்கோட்டையில் பெற்றவை, நாடியம்மன் கோயிலும் புகழ் சில நவக்கிரகங்களுக்கு இம்மாவட்டத்தில் தனிக் கோயில்கள் உள்ளன. சுவாமிமலை, எட்டிக்குடி, சிக்கில், வைத்தீசுவரன் கோயில், எண்கண் ஆகிய ஊர்களில் முருகன் கோயில் கள் சிறப்புடன் அமைந்துள்ளன. விநாயகர் கோயில்களில் திருச்செங்காட்டாங்குடி நரமுக விநாயகர், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர், திருப்பனந்தாள் காசி விநாயகர், திருவாவடுதுறையில் துணை வந்த விநாயகர், குடந்தை நாகேசுவரசுவாமி கோயிலில் கங்கை கணபதி, நாகப்பட்டினம் நாகாபர பணப் பிள்ளையார், பஞ்சமுக விநாயகர், சீர்காழி ஆபத் துக்காத்த . விநாயகர், மாயூரம் முக்குறுணி விநாயகர் கோயில்கள் முக்கியமானவை. கணபதி அக்கிரகாரத்தில் கணபதிக்குச் சிறந்த விழா எடுக்கப்படுகிறது. யூரில் வரிசை வரிசையாக விநாயக உருவங்கள் உள்ளன. கண்டி டி வைணவம்: வைணவர்கள் வழிபடும் பல கோயில் களும் தஞ்சை மாவட்டத்திலுள்ளன. இவற்றுள் முக்கிய மானவை ஏராளமான மங்களா சாசனங்களைப் பெற்ற கும்பகோணம் சாரங்கபாணி கோயில், கும்பகோணம் சக்கரபாணி கோயில், நாச்சியார் கோயில், (நாச்சியார் கோயில் அருகேயுள்ள) திருச்சேரை, வழுவூர், நீடாமங்க. லம், திருக்கண்ணமங்கை, தில்லைவிளாகம் ஆகிய வைண வப் பதிகளும், தேரெழுந்தூர் அமருவியப்பர், மன்னார்குடி இராசகோபாலசாமி கோயில் ஆகியவை.