பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆகும். பல்லவர் காலத்திலேயே இந்நகரம் சிறந்த துறைமுகமாக இருந்துவந்தது. இங்கு சீன வணிகரின் பொருட்டு ஒரு பௌத்த விகாரம் கி.பி. 720 அளவில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பெற்றது. இராசராசச் சோழன் காலத்தில் நாகப்பட்டினத் திற்கு வந்த பிறநாட்டவர் வழிபடுவதற்காக, சூடாமணி விகாரம் ஒன்று கட்டப்பெற்றது. அவ்விகாரத்துக்கு ஆனைமங்கலம் என்ற ஊரையும் அதைச் சேர்ந்த பல ஊர் களையும் முற்றூட்டாக (எந்தவிதமான வரியும் இல்லாத நன்கொடைக் கிராமமாக) வழங்கி இச்செய்தியை செப் பேட்டிலும் இராசராசச் சோழன் வெளிப்படுத்தினான். ஆனைமங்கலம் செப்பேடுகளின் எண்ணிக்கை 27. இவை ஒவ்வொன்றும் 14 அங்குல நீளமும் ஐந்து அங்குல அகலமும் உள்ளவை. இவையாவும் செப்பு வளையத் தால் கோக்கப்பட்டன. இவற்றைக் கண்ட டச்சுக் காரர்கள் உடனே தங்கள் நாடான ஹாலந்துக்குக் கொண்டுபோய் அங்கு லீடன் நகரக்காட்சி நிலையத்தில் பெருமையாக வைத்து இவற்றுக்கு "லீடன் பட்ட யங்கள்" என்ற பெயரையும் ஆராய்ச்சியுலகில் புகுத்தி விட்டனர். 9 6 முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இப் பெளத்த விகாரத்துக்கு நில மானியங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. நாகப்பட்டினம் தவிர பிற இடங்களிலும் பௌத்தர் கோயில்கள் இருந்திருக்கின்றன. திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில் ஒருகாலத்தில் பௌத்தர் கோயி லாக இருந்தது என்பர். கும்பகோணத்தில் இருந்த ஒரு பௌத்தர் கோயிலுக்குச் சேவப்ப நாயக்கர் காலத்தில் நில மானியம் கொடுக்கப்பெற்றிருக்கிறது. பௌத்த மித்திரர் தோன்றிய பொன்பற்றி இம்மாவட்டத்தில்