பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தஞ்சை மாவட்டம் பொன்நாடு; புனல் நாடு; தஞ்சம் தரும் வளநாடு; பஞ்சமும் நோயும் அணுகா நாடு. 'உலர்ந்த நெல்லைத் தின்னவரும் கோழிகளை பெண்கள் தங்கள் காதிலே அணிந்துள்ள பொற் குழையால் எறிந்து விரட்டுவார்களாம். உப்பு வணிகர் நெற்பயிரிலே தங்களின் ஓடத்தைக் கட்டுவார்களாம். அறச்சாலைகளிலே சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி, தெருவிலே ஆறு போலப் பரந்து செல்லுமாம். என்று சங்க இலக்கியங்கள் இம்மாவட்டத்தைச் சிறப்பிக்கின்றன. இத்தகைய மாவட்டத்தின் வரலாற்றையும் செய்திகளையும் இந்நூலில் தர முயன்றிருக்கிறேன். இதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளையும் மிக விரிவாகச் சுற்றிப் பார்த்தேன். இப்பயணத்தின் பயனாக, பாடல் பெற்ற தலங்களையெல்லாம் கண்டு வழிபடும் பேறு பெற்றேன். பலதுறைகளில் சிறந்து விளங்கும் தஞ்சை மாவட்டத்தைப் பற்றிய பற்றிய நூல் இவ்வரிசையில் பிற நூல்களைவிட மிகப் பெரிதாக அமைந்திருக்கிறது. தஞ்சையின் பெருமையைத் தக்கவாறு உணர்த்த இதைவிடப் பெரியநூல் எழுதவேண்டும்; எழுதவும் இயலும். பிற இந்நூலில் விடுபட்ட செய்திகளையும் குறைபாடுகளையும் அன்பர்கள் சுட்டிக்காட்டி எனக்கு எழுதுவார்களாயின், பயனுடையதாக இருக்கும்.