பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

117


வழி இல்லே. பாங்கியிலே நானூறு, ஐநூறு போட்டிருந்தான். இதோ போறதே இந்த பொண்ணு கல்யாணத்துக்கு செலவழிஞ்சு போச்சு. என்ன செய்யறது? சாப்பிட்டாகணுமே! அவன் பொண்டாட்டி அவன் இருக்கிறபோதே இப்படி ஆரம்பிச்சுட்டா. இந்தப் பொண்ணோடு ஆம்படையானுக்கு கல்யாணமாகி நாலு மாசம் கழிச்சுத்தான் இதெல்லாம் தெரிஞ்சுது. அழைச்சு வச்சுண்டிருந்தான் மதுரையிலே. சமாசாரம் தெரிஞ்ச உடனே அடிச்சு விரட்டிப்புட்டான். தாயார் அப்படி இருந்தா பொண்ணு என்ன செய்யும்? அப்ப எல்லாம் இந்தப் பொண்ணு யோக்கியமாத்தான். இருந்தது. அது வாழாவெட்டியா வந்து சேர்ந்ததும் அம்மாக்காரி இப்படி பழக்கிப்பிட்டா. ஏழெட்டு குழந்தைகள்! வீட்டோட இந்த விடோவுக்கு ஒரு அம்மா கிழவி வேறெ. இருக்கா. என்ன செய்யறது? கிளப்பிலே இந்த ரெண்டும் அரைக்கிறது. என்னத்தை கிடைக்கப் போறது? ஒரு நாள் முழுக்க அரைச்சா எட்டணா கிடைக்கிறதே கஷ்டம். பத்துப் பேர் இருக்கிற குடும்பம். ஒரு ரூபாயிலே தினமும் ஒடுமோ? இப்படித்தான் பிழைக்கவேணும். என்னவோ யார் கண்டா? நேரிலே பார்த்ததில்லே. சொல்லக் கேள்வி. நானும் நிச்சயமா தெரியாட்டா சொல்லமாட்டேன் என்று மறுபடியும் அதே முத்தாய்ப்பு வைத்து முடித்தார் சீனு மாமா.

"என்ன கஷ்டம்!”

"கஷ்டம்தான். ஆனா நகையும் நட்டும் வீடும் நிலமும் வச்சுண்டு சிலபேர் ஊர் சிரிக்கறதுக்கு இதுவொண்ணும் கெட்டு போயிடலே, பெரியாத்து சமாசாரம், தெரியுமோ இல்லியோ?” என்று தமக்குப் பிடிக்காத யாரைப்பற்றியோ தொடங்கிவிட்டார் சீனு.

"அப்படி எல்லாம் திமிர் பிடிச்சு போக்கிரித்தனம் பண்றா. அதுக்கு கேட்பாரில்லை. பணம் எல்லாத்துக்கும் பிராயச்சித்தம் பண்ணிப்பிடும். இந்த மாதிரி நாதன் இல்லாம, சோத்துக்கும் இல்லாம, எடுபட்டுடுத்தோ, அவ்வளவு தான். கட்டுப்பாடு காயிதா எல்லாம் அமர்க்களப்படறது. சாமா இருந்தபோது, ஜோஸ்யம் ஜோஸ்யம்னு- வாசல் திண்ணையிலே, திருச்சிராப்பள்ளி எங்கே, மதுரை எங்கே-கடலூர் எங்கேன்னு பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் வந்து காத்துண்டிருக்கும். காரும் குதிரை வண்டியுமா வாசல்லே அதும்பாட்டுக்கு அவுத்துப்போட்டுக் கிடக்கும். வியாபாரிகள், மிராசுதாரர்கள்!-ஒண்ணும் அப்பைசப்பையா இராது. அவன் அப்படி இருந்ததுக்கு கடைசியிலே சொல்லிமாளாது-- அவ்வளவு. கஷ்டத்தையும் அனுபவிச்சுப்புட்டான். போராதுன்னு. இதுகள் வேறே இப்படி சிரிக்கிறதுகள். ஊரிலே ஒருத்தரும் போக்குவரத்து கிடையாது. அந்த வீடு மாத்திரம் இருக்கு. அதுவும் இடிஞ்சும் கிடிஞ்சும்