பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஜெகசிற்பியன்

ஜீவகீதம்’ ‘சொர்க்கத்தின் நிழல்’ போன்ற பிரபலமான நாவல்களின் சொந்தக்காரரான ஜெகசிற்பியன் பிறந்து வளர்ந்தது மயிலாடுதுறை.

நாவலில் அவர் அளித்துள்ள பங்களிப்பைப் போல் சிறுகதையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார். ‘சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ எழுதியவர்கள் இவரை விடுவித்தது தமிழுக்கு உண்மையான வரலாற்றைத் தரவில்லை என்பது நிரூபணமாகிறது. சிறுபத்திரிக்கையில் அவர் அதிகம் எழுதவில்லை, வெகுஜனபத்திரிக்கையில் தான் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள சிறந்த சில கதைகளுள் ‘நரிக்குறத்தி’ குறிப்பிடத்தகுந்தது. இந்தக் கதை ஆனந்தவிகடன் நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில் (1957) பரிசு பெற்றது.

‘ஊமைக்குயில், சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தி.ஜ.ர. “ஜெகசிற்பியன் கதைகளில் உள்ளுறையும் ஜீவன் ஒன்று இருக்கிறது. அது நம் உள்ளத்தோடு உறவு கொண்டு விடுகிறது. அதை நாம் எடுத்துரைப்பது சாத்தியம் அல்லது. ஆயினும் பல அம்ச லட்சணங்கள் சேர்ந்த சமுதாய சோபை ஒன்று வெளிப்படப்புலப்படும். அதை நாம் காணமுடியும்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெகசிற்பியனின் படைப்பின் உள்விவகாரங்களை கண்டு கொண்டு தமிழன் பெருமைப்பட முடியாது.