பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

159



“எதில்? ஊரில் தனியரசு செலுத்தும் இந்த ஒற்றைக் குரங்கினிடமா...?”

“இந்தக் குரங்கு மட்டுமா? நம்மூரில் இதேமாதிரி தனியரசு செலுத்தி அட்டுழியம் செய்யும் பல பிராணிகள் இருக்கின்றன. நான் இந்தக் குரங்கைப் புரிந்து கொண்டு விட்டதால் எனக்கு இந் ஊர்ப் புண்யவான்களை விபூதி ருத்ராக்ஷப் பிராணிகள் எல்லோரையும் பற்றிப் புலப்பட்டு வருகிறது. நானா, இவனுகள் எல்லோரும் இப்டியே இருந்தால் இன்னும் இரண்டொரு தலைமுறையில் இந்த ஊரில் பாழ்மனைகள் பலவும், மூணோ நாலோ மாடிவிடும் தான் இருக்கும்..”

“ராமு, அந்த கோபாலய்யர்...”

“அவன்மேலே குற்றமில்லை. இருக்கிற சம்பிரதாயம், சட்டத்திட்டம்...”

“கோபாலய்யர் உனக்கு ரொம்ப வேண்டியவர். நெருங்கிய உறவினர்கூட. இல்லையா?”

“அதனால் தான் என்னை இப்படி உறிஞ்சிக் கொன்றார்.”

“கடைசியில் அவருக்குக் கொடுக்க வேண்டிய கடன் போக என்ன மிச்சம் உனக்கு?”

“பச்சை காய்ந்து வரட்சி குத்தும் இந்த மனமும், வாழ்ந்த ஊரில் ஓட எடுக்க ஆன இந்த தினதசையும் தான் மிச்சம்.”

“வட்டியையாவது வருஷா வருஷம் கட்டியிருக்கலாம் நீ”

“அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? முதலிலேயே ஒரு பகுதியை அடைத்திருப்பேனே? இவர்பண்ணின யுக்தியால்...”

“என்ன யுக்தி...?”

“வட்டி அதிகமாய் எழுதுவதற்கென்றே தன் தங்கையின் பெயரால் பந்தகம் எழுதினார். அவள் எங்கேயோ பம்பாயில் இருக்கிறாள் பெண்ணோடு, வரவு வைக்க வழியே இல்லை. பத்திரம் அவளிடம் இருக்கிறதென்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டார் அவர். நம்ம செய்திதான் தெரியுமே உனக்கு, மூணு முழமும் ஒரு சுற்று. முப்பது முழமும் ஒரு சுற்று.”

“உண்மையில் பணம் யாருடையது?”

“இவரதுதான்”

“பின்னே ஏன்?”

“அதுதான் அதிக வட்டிக்கும், ஆளை ஒழித்து அஸ்தியை அப்படியே கட்டிவைக்கவும் யுக்தி. இது இந்த ஊரான்களுடைய வெகு நாளைய சம்பிரதாயம்.”

“சரிதான், பஞ்சாபிகள் எல்லாம் தவணைக்கடை...”

“அதாவது நேரடியாகத் தெரியும். கத்தியைப் பார்த்துக் கொண்டே கழுத்தை நீட்டுகிறார்கள். இங்கே, அப்படியே வெளியிலே குளுமைப் பேச்சைப் பூசிப்பூசி உபசாரம் பண்ணியே பணத்தைக் கொடுத்துவிட்டு நோகாமல் கழுத்தை அறுத்து