பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூமத்திய ரேகை

ரு சிலரே ஆயினும், அறிவாளிகளே நிறைந்த அந்தக் கூட்டத்தில் அவன் மிகவும் அழகாகத்தான் பேசிவிட்டான். கவிதா வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு வந்த உவமைகள் சபையினரின் பிரமை பூண்ட கரகோஷத்துக்குக் காரணமாயின. அவைகளிலும் அவனுக்கே வியப்பு அளித்த உவமை ஒன்று. அதைப் பற்றி அவன் முன்னதாக நினைக்கவில்லை; மேலும் மேலும் விரியும் அவனுடைய பிரசங்கத்தில் அது தானாகவே முளைத்தது.

அவன் பேசினான்;

‘பூகோளம் படித்த நீங்கள் அறிவீர்கள். பூமத்திய ரேகையைப் பற்றி, பூமிக்கு இடையில் உள்ளதாகக் கூறப்படும் அந்த கோடு வெறுங் கற்பனை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் விஷயம் அறியாத ஒருவன் அந்த ரேகை உண்மையாகவே உள்ளது என்று நம்பி அது காலப்போக்கில் விரிந்து கொண்டே போகும் என்று எண்ணினால்? அப்படியே விரித்து, பூகோளம் முழுவதையும் அந்தக் கோடு ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும் அவன் கற்பனை செய்தால்...? இவ்வாறெல்லாம் எவனும் நினைக்கவும் மாட்டான், நம்பவும்மாட்டன்.

ஆனால் இன்றைய மனித ஜாதியின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. மனிதனுள் பூமத்திய ரேகை “நான்” என்னும் உணர்ச்சி, பூகோள ஞானத்துக்கு அந்தக் கற்பனைக்கோடு எவ்வளவு அவசியமோ, மனித முன்னேற்றத்துக்கு அமைதியான வாழ்க்கைக்கு அந்த உணர்ச்சி அவ்வளவு அவசியந்தான். ஆனால் துர்ப்பாக்கியவசமாக மனிதன் இந்த ரேகைக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கற்பித்துவிட்டான். “நான்” என்னும் அகங்காரம்தான் உயர்வு தரும் என்று நம்பி ஏமாறுகிறான். நம் சமுதாயத்தில் ஆத்மீக வீழ்ச்சிக்கு மூல காரணம் இதுதான்.”

அத்துடன் அவனுடைய பிரசங்கம் முடிவுற்றது. நீண்ட கரகோஷம் செய்தார்கள். அவனுடைய சொற்பொழிவில் மயங்கிய சிலர் அவனை அணுகிப் பாராட்டினர். பிறகு அவன்