பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

171


நாகரிகமும், கீழ்நாட்டு நாகரிகமும் மல்லுக்கு நிற்கின்றன. உடல்தான் எல்லாம் என்று உவமை வற்புறுத்துகிறது ஒன்று. ஆத்மா என்பது வெறும் பொய் என்கிறது அது. ஆத்மா தான் நித்தியம், அதுவேதான் எல்லாம் என்ற அழுத்தமாய்ச் சொல்கிறது மற்றொன்று. இரண்டு வகை தெரியாமல் மோதிக் கொள்கின்றன; ஒன்றுக்கொன்று முரணானவை என்று அவைநினைக்கின்றன. ஆனால், இரண்டையும் சமமாகவும், சமாதானமாகவும் இணைக்கலாம். அப்படி இணைப்பதில்தான் மனித ஜாதிக்குக் கதிமோச்சம் என்பதைத்தான் நான் உலகுக்கு என் எழுத்துக்கள் மூலம் காட்ட விரும்புகிறேன். உலகம் நான் எழுதுவதை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் நான் உணர்வதை எழுத வேண்டியது என் கடமை.”

இரவின் முன்பகுதியில், மேடையின் மீது நின்று பிரசங்கமாகப் பொழிந்தபோது இருந்த உக்கிரம் இப்போதும் அவனை ஆட்கொண்டுவிட்டது. அவள் தன்னைக் கவனிக்கிறாளா, புரிந்து கொள்கிறாளா என்பதைக் கவனிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. “நான் எழுதுவதற்கு நீதான் ஊக்கமளிக்கவேண்டும்.”

“உங்களை எழுத வேண்டாம் என்று நான் தடைசெய்யவில்லையே?” அவள் கொட்டாவியை விட்ட வண்ணம் கூறினாள்.

“ஆனால் என்னை உன் பக்கத்தில் கூட வரவிடாமல் துரத்துகிறாயே?”

“எங்கே? எவ்வளவோ, நம்பிக்கையுடன் மன நிறைவுடன் உன் அருகில் வருகிறேன். நீதான் சந்தோஷம் இல்லாத வார்த்தையாலோ, மெளனத்தாலோ என்னைத் துரத்தியடிக்கிறாய்.”

“நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்கிறது?”

“சரி, போனது போகட்டும். இன்றையிலிருந்து நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம். ராஜம்! அக்கினி சாட்சியாக நாம் செய்துகொண்ட பிரதிக்ஞையைத் தெய்வ சந்நிதானத்தில் புதுப்பித்துக் கொள்வோம்.”

மகிழ்ச்சியுடன் அவளுடைய கரங்களைப் பற்றி அவன் தூக்கினான். ஆனால் அவள் அசையவில்லை. வெகு நேரம் கழித்து அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன...

“நாளைக்கு நான் ஊருக்குப் போகிறேன். கொஞ்ச நாட்கள் இருந்து வரவேண்டும்.”

அவள் குழந்தைத்தன்மை உடையவள் என்றால் குழந்தை இப்படியா பேசும்? இருபது வயது பெண்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றும் குடும்பம் நடத்தவில்லையா? எவ்வளவோ