பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

173


அவனால், அப்போது தான் அவன் பொறுமையை இழந்தான்.

“என்னுடன் வாழ உனக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா?” என்றான் உள் புகுந்து.

அவளுடைய மெளனம் அவனைக் குதறியது. பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலுள்ள சூரியனின் வெம்மை தன்னைச் சுட்டுக் கறுக்குவது போல் அவன் உணர்ந்தான்.

“உயிருடன் என்னைப் புதைக்கவா என்னை மணம் புரிந்தாய்?”

அதற்கும் அவள் பேசவில்லை. புதையுண்டு போன தன் சவத்தின் துர்க்கந்தத்தைத் தானே சுவாசிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. மூச்சு தவிதவித்தது

“நான் ஆணாய்ப் பிறந்ததே குற்றம்!” என்றான் ஆற்றமையுடன்.

“இல்லை. நான் பெண்ணாய்ப் பிறந்ததுதான் குற்றம்!”