பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

185


திரும்பிடு. ராத்திரியிலே ரொம்பநேரம் நிண்ணாப் பனி ஒத்துக்காது” என்றான் அவன்.

அவள் ஒன்றும் பேசவில்லை. ‘அலங்காரத்தின் ஆட்டத்தைப் பார்க்கிறது என் இஷ்டம். வந்து பாருண்ணு சொல்றதுக்கு நீங்க யாரு?’ என்று ஆத்திரம் தீர அவனிடத்தில் தன் உணர்வுகள் அத்தனையும் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவளது பொறுமை தடுத்தது. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து புறப்பட்டு உதட்டின் விளிம்புக்கு வந்த வார்த்தைகள் உள்ளேயே அடங்கின. அவள் மெல்லத் தலையசைத்தாள். பொங்கி வழியும் கசப்புணர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நெளிவது போல் துடிக்கும் அவளது உதடுகளைப் பார்த்தான். அலங்காரத்தைப் பற்றி பேச்சை எடுக்கும் போதெல்லாம் அவள் முகம் இனம் தெரியாத பாதிப்புகளால் நிலைமாறிப் போவதை அவன் பன்முறை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறான். அப்பாவிப் பெண்ணான அலங்காரத்தின் மீது இவளுக்கு ஏன் இத்தனை குரோதம் என்றும் நினைத்துப் பார்த்தான். பல சமயங்களில், வடிவாம்பாளின் இந்தக் குறையே பெண்மையின் நிறைவாகத் தோன்றியது. வடிவாம்பாளின் மனத் தடுமாற்றத்தைச் ‘சக்களத்திப் போராட்டம்’ என்று கொச்சைப்படுத்தி நினைக்க முத்துத்தாண்டவனால் முடியவில்லை. கடந்த நான்கு வருடங்களாகத் தனக்கு மாலையிட்ட அன்று முதல் இன்றுவரைத் தன் மனம் கோணாமல் நடந்து வரும் புண்ணியவதியை நேற்று வந்த அலங்காரத்திற்காகப் புறக்கணித்துவிடுவதா? அல்லது தேடிப் போகாமல் தானே வந்து ஐக்கியமாகிவிட்ட அலங்காரத்தின் அன்பைத் தள்ளி விடுவதா?-உண்மையில் வடிவாம்பாளைவிட முத்துத்தாண்டவனே சிக்கலான மனப்போராட்டத்தில் இருந்தான்.

“வடிவு, நீ இன்றைக்கு ரொம்ப அழகாயிருக்கே! என்ன இருந்தாலும் இந்த முத்துத்தாண்டவனின் மனைவியில்லே...” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறிப் பேச்சை மாற்றி, அதன் மூலம் அவளது மனநிலையை மாற்றிய அவன், அவளிடத்தில் விடைபெற்றுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டான்.

அலங்காரம் என்ற சொல்லே ஒரு நுட்பமான அழகைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அந்த அழகான சொல்லையே தன் பெயராக வைத்திருக்கும் அவள் எப்படி இருப்பாள் என்பதைச் சொல்ல வேண்டுமா? புனைந்து கொள்ளுதல் இல்லாமலேயே பொலிவு பெற்று விளங்கும் அவள் முகத்தைப் பார்ப்பவர்கள் இப்படியும் ஓர் அழகு உலகில் உண்டா? என்று வியந்து போவார்கள். சமுதாயத்திலே இருக்கிற பெரும்பான்மையோரின் செல்வம், சில சமயங்களில் ஓரிருவரிடத்திலேயே முடங்கிவிடுவது போல உலகத்தின்