பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

சோலை சுந்தரபெருமாள்



கன்னி கழியாப் பதுமை. அசல் பதுமையாகவே உருக்கொண்டாள்.

பவளம். நீ தருமத்துக்கும், சத்தியத்துக்கும் கட்டுப்பட்ட நல்ல பாம்பு! அந்த துப்பு எனக்குத் தெரவுசாயத் தெரியும்; அதொட்டிதான் உம்புட்டு மாடு பாய்ஞ்சி உசிருக்கு ஆபத்தாகிக் கெடந்த என்னை ஏறெடுத்தும் பார்க்காம இருந்த அலங்கோலத்தைக் கூட நான் பொருட்படுத்தலே! உங்கிட்ட கெலிச்சிருச்சு! ஆனா. உம்புட்டு செவலைக்கு அந்த முரடன் முத்தையனைத்தான் புடிச்சிருக்கும்போல; அதனாலேதான் அது அந்த ஆள்கிட்ட தோத்து போட்டு. ஒன்னை, என்னொட ஒப்படைச்சிடப் போவுது. பவளம், எந்தவிதியை நான் இது பரிந்தம் நம்பாமல் இருந்தேனோ அந்த விதியை நான் நம்பித் தீரவேண்டிய கட்டத்திலே நான் நின்னுக்கின்னு இருக்கேன். ஒன்னைக் கொண்டுக்கிறதுக்கு இந்தப் பாவிக்குப் பொசிப்பு இல்லை. முத்தையன் அண்ணாச்சி கொடுத்து வச்ச புள்ளியேதான்! அட்டியே கெடையாது! நீங்க ரெண்டுபேரும் நல்லா இருக்கனும்; இதான் எம்பூட்டுக் கடைசியான, அந்தரங்க சுத்தியான ஆசையாக்கும்!”

“மச்சானே!...”

“ஊம்!”

“ஒங்களுக்கு ரொம்ப ரொம்பச் சுத்தமான மனசுங்க! இந்தப்பெரிய மனசு நம்ப ஊர் நாட்டிலே யாருக்குமே வராதுங்க. சத்தியத்தை நாம வாழ வச்சாதான், சத்தியம் நம்பளையும் வாழ வைக்கும். அதே சத்தியத்தை நம்பியேதான், நீங்களும், நானும் உசிருக்கு உசிராய் பழகினோம். ஒரே உசிராகவும் பழகினோம். எல்லை தாண்டாமலும் பழகினோம். அந்த பரிசுத்தமான நேசத்தை நீங்களும் மறக்க ஏலாது. நானும் மறக்க வாய்க்காது. இந்த கதை காரணத்தை என்னோட புது மச்சான்காரவுகளும் தெரிஞ்சு வச்சிருக்காமல் இருக்கமாட்டாங்க. நம்மோட துல்லியமான அந்த நேசத்தை சாமி கையெடுத்துக் கும்பிட்ட சத்தியம் எப்பவும் இந்த சென்மத்திலே மட்டுமில்லை. இனி ஏழேழு சென்மத்திலேயும் வாழ்த்திக்கிட்டே இருக்கும். வாழ வச்சிக்கிட்டும் இருக்குமுங்க, அந்தாலே பாருங்க எம்புட்டு புது மச்சானுக்கு. எம்புட்டு வீராதி வீரத்தனமான பூரணிக் காளையையே அடக்கி மடக்கிப் போட்ட சூராதி சூரரான எம்புட்டு புதுசான மச்சானுக்கு இன்னமும் கூட எங்கிட்டே நெருங்கவே வல்லமை வரலே. அவுக அங்கிட்டே நிக்கட்டும்; அவுகளை அப்பாலே நானே கையைப் புடிச்சிக் கூப்பிட்டுகிடுவேன். அதுக்குள்ளார, எனக்கின்னு உண்டான ஒரு தவக்கடமை இருக்குதுங்க! ம், நீங்க மெதுவா எந்திருங்க; ம், நான் சொல்றேன்; பைய... பைய... எழுந்திருச்சி என் கழுத்தை கட்டிப்