பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

195


பிடிச்சுக்கிட்டு எம்புட்டு பொட்டி வண்டியிலே வச்சு அறந்தாங்கி சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிகினு போகப் போறேன்; நீங்க நல்லபடியாய் பிழைச்சு, என்னையும் என் மச்சானையும் சத்தியமான மனசோட வாழ்த்தவேனும் என்கிறது என்னோட ஆசையாக்கும்!”

முத்துலிங்கம் உருகுகிறான்!

செம்பவளம் அவனை நெருங்குகின்றாள்!

அந்தி சிரிக்கின்றதே?

“பவளம், உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு என்னைத் தீண்டிபுடாதே!”

“மச்சானே!”

“உம்புட்டு மச்சானான அந்த பழைய முத்துலிங்கம் மாண்டு மடிஞ்சிட்டான். நான் புது முத்துலிங்கம். நீ தீண்ட வேண்டியது முத்தையா அண்ணாச்சியைத்தான். காலத்தோட சேர்ந்து ஊரும் கெட்டுக்கிடக்கிற நேரம் இது. நீயும் முத்தையனும் ஆயிரங்காலத்துப் பயிராய் வாழவேண்டியவங்க. அந்த தருமத்துக்குக் குறுக்கால என்னை இழுக்காதே. நான் வரவும் ஒப்பமாட்டேன். பவளம்! நீ எட்டி நில்லு. அதோ ஒன் புது மச்சான் வந்துகிட்டு இருக்குது பவளம்!”

செம்பவளத்தின் நிழலில் ஒண்டினான் முத்தையன். தலையை உயர்த்தி மதுரை வீரன் மீசையை முருக்கி விட்டான். கட்டபொம்மன் கண்களை திரட்டி உருட்டி, நாளாப் பக்கத்திலும் சுழலவிட்டான். இருந்திருந்தாற் போல, ஓர் அதிர்வேட்டுச் சிரிப்பையும் முழக்கினான்;! “எலே புள்ள பவளம், தம்பி முத்துலிங்கம் தங்கக் கம்பி! நான் உன்னைக் கண்டு பயப்பட்டேன். ஆனா நம்ப முத்துலிங்கம் தம்பி ஊர் உலகத்தைக் கண்டு பயப்படுது. ஒட்டிவாடி குட்டி நீயும் நானும் சேர்ந்து நம்ப முத்துலிங்கத்தை கைத்துக்கலாய்த் தூக்கி, ஒம்புட்டு வண்டியிலே வச்சு, ஆஸ்பத்திரிக்கு அழைச்சுபோய், நல்ல வைத்தியமாய் பண்ணி வைப்போம். ம்...வா, புள்ளே, வா” என்று கெஞ்சினான்.

செம்பவளத்தின் ஸ்பரிசம் முத்துலிங்கத்தின் மேனியைத் தீண்டியதுதான் தாமதம்! -

மறு இமைப்பிலே!

“ஐயையோ! பவளப்பெண்ணே!”

அலறியவன் முத்துலிங்கம்.

அப்போது.

செம்பவளம் மாத்திரம் சிலையாகவில்லை.

முரடன் முத்தையனும் சிலையாகிவிட்டான். சிலை பேசவும் தொடங்கிவிட்டது. “செம்பவளப் பெண்ணே! நடப்பு லோகத்துக்கு தக்கனை நானு சத்தியத்துக்குப்பயப்படாத முரடனாகவே வளர்ந்துபுட்டேன். ஆனதாலே எனக்கு ஏத்த