பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சோலை சுந்தரபெருமாள்


ஈடுபடாத அந்தண ஈயே பெரும்பாலும் இல்லையல்லவா? இவரும் அந்த ஈக்களில் ஒருவர் தாமே?

கலால் இலாகாவில் மேலதிகாரியின் உபத்திரவம் அதிகந்தான். ஆயினும் பனைமரங்களின் பரம காருண்யத்தால் கிடைக்கும் மேல் வரும்படியைக் கொண்டு சாஸ்திரியாரும் அவர் தர்ம பத்தினி சுந்திரியம்மாளும் இதுவரையில் சுகமாகவே காலங் கழித்து வந்தனர். இப்போது நல்ல இடத்திற்கு மாற்றப்பட்டிருந்த படியால் அவர்கள் பாடு கொண்டாட்டமாகவே இருந்தது.

2

“கையிலிருக்கும் சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் சாமர்த்தியம் ஒரு நாளும் உங்களுக்கு வரப் போவதில்லை. வேதாந்தம் பேசியென்ன? சுலோகங்களை அடுக்கடுக்காய்ச் சொல்லி என்ன? யாருக்குப் பிரயோசனம்? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று சாஸ்திரியாரின் தர்மபத்தினி சுந்தரியம்மாள் கேட்டாள்.

“ஆமாம் சுந்தரி, வாஸ்தவந்தான். வாய்ப் பேச்சுக்கு என்ன ? காசா பணமா? வாய் கொண்ட மட்டும் பேசினால் போகிறது. செய்து பார்த்தாலல்லவோ தெரியும் கஷ்டம்? என் வேலையை ஒரு நாள் செய்து பாரேன்.”

“என்ன, இந்த முத்திரை போடும் பெரிய வேலையையா? அல்லது கள்ளு காலன் கணக்கையா? அபார வேலை தான்!” என்று சுந்தரி ஒரு பாணம் போட்டாள்.

‘ஏதடா இது, எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டோமே’ என்றெண்ணிச் சாஸ்திரியார் சிரித்துக்கொண்டு நீலகண்ட தீவு தரவர்களுடைய நீதி சுலோகங்களுள் அச்சந்தர்ப்பத்திற்கேற்ற தொன்றைத் தம் இனிய குரலில் சொல்ல ஆரம்பித்தார்.

“ஏன், நல்ல சாரீரத்தோடு பாட்டுப் பாடிவிட்டால் உண்மையை மறைத்து விட முடியுமோ? ஐந்து வருஷ காலம் அந்தப் பாழாய்ப் போன கடப்பை ஜில்லாவில் போய் மடிவானேன்? கேட்ட சமயத்தில் ஏ.வி.யின் (அஸிஸ்டென்ட் கமிஷனர்) காம்ப் கிளார்க்குக்கு இரண்டு டின் நெய் அனுப்பியிருந்தால்?-நம் கையை விட்டா கொடுக்கப் போகிறோம்? கையைக் காட்டிவிட்டால் எந்தக் கிராமணியாவது கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போகிறான்.”

“ஆமாம் சுந்தரி, ஆட்டுக்கறி, புலால் சமைக்க, சோமயாகம் செய்த கிருஷ்ண தீஷிதர் பிள்ளை சுப்பிரமணிய சாஸ்திரி நெய் சப்ளை செய்ய வேண்டியதுதான்; நியாயந்தான்!”

‘பரிகாசம் பேசி என்ன லாபம்? காலத்துக்கு ஏற்றவாறு போக வேண்டியதன்றோ நம் கடமை? இல்லாவிட்டால் நமக்கு எப்பொழுதும் ஏக்கந்தான் கதி. கடப்பையில் இந்த ஐந்து