பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

சோலை சுந்தரபெருமாள்


முனியாண்டி தேவர் வெளியில் வந்தார். அவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஒதுங்கி நின்றான்.

எங்க ஓடுற”

“கருப்பாட்டக் காணோம் மாமா”

“தோட்டத்துப் பக்கம் ஆட்ட எல்லாம் விரட்டி விட்டுட்டு ஆட்டமா போட்டுக்கிட்டு இருக்க... இரு... இரு... இன்னிக்கு எல்லாத்தையும் பட்டியில் கொண்டு போய்த் தள்ளிடுறேன்” என்று திரும்பினார்.

அவன் அவரைத்தாண்டி மூங்கில் படலைத் திறந்து கொண்டு கத்தரித் தோட்டத்திற்குள் வேகமாக ஓடினான்.