பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நிஜங்கள்

“சார்...சார் வடுவூர் ஒண்ணு!” விடிந்தால் தீபாவளி, பஸ் எல்லாம் ஒரே கூட்டம். பட்டாசும் புதுத்துணியும் வாங்க தஞ்சாவூர் டவுன் முழுவதும் கூட்டம் கூட்டமாய் மக்கள் திரிந்தனர். வாங்கியவர்கள் ஊருக்குப் போகிற அவசரத்தில் பஸ் ஸ்டாண்டில் மொய்த்தனர். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் கண்டக்டர்கள் திண்டாடினர்.

“டிக்கெட் வாங்காம யாரும் பஸ்ல ஏறாதீங்க கீழே நின்ற காக்கிச் சட்டைக்காரர் எச்சரித்தார். சாதாரண நாட்களில் வடுவூர், மன்னார்குடி என்று போகிற வழிகளில் உள்ள ஊர்களை எல்லாம் ஏலம்கூவி பஸ்ஸுக்கு கூட்டம் சேர்க்கத் துடிக்கிறவர், இன்றைக்கு மிதப்பில் எச்சரித்துக் கொண்டிருந்தார்.

“சார்...சார்...வடுவூர் ஒண்ணு”

கண்டக்டர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பத்து வயசு முருகேசனுக்கு அதற்கு மேல் முண்டியடித்து டிக்கட் வாங்க முடியவில்லை. கூட்டம் நெருங்கியது.

“எல்லாம் துரு டிக்கெட் தான்”

கண்டக்டர் இடைவழியில் உள்ள ஊர்களுக்கு டிக்கெட் போட மறுத்தார். இந்த பஸ் வடுவூர் வழியா மன்னார்குடி போனாலும் வடுவூருக்கு டிக்கெட் கிடையாது. முருகேசன் யோசித்தான்.

“அப்படின்னா மன்னார்குடிக்கு டிக்கெட் ஒண்ணு குடுங்க!”

அவன் முடிவெடுத்து ‘துரு’ டிக்கெட் கேட்கும் போது கண்டக்டர் டிக்கெட்டை முடித்து விசில் கொடுத்தார். இனி அடுத்த பஸ் தான். எஞ்சி நின்ற கூட்டம் ஆசுவாசமடைந்தது.

‘அடுத்த பஸ்ஸுக்கு எடுத்த, ஒடனேயே ‘துரு’ டிக்கெட்ட கேட்ற வேண்டியதுதான்’

அவன் யோசனையில் பையைத் துழாவினான். மன்னார்குடி வரை டிக்கெட்டுக்குக் காசு இருந்தது. மன்னார்குடிக்கு டிக்கெட் எடுத்து இடையில் வடுவூரில் இறங்கி மூணு மைல் நடந்து ஊர் போகவேண்டும். இப்போதே இருட்டி