பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

சோலை சுந்தரபெருமாள்


நீருக்குள்ளிருந்து வாய் பிளந்தது போல் ஆற்று வெள்ளம் சுழித்து திரண்டது. வெள்ளம் மூடிய போது லோச்சனாவையும் காணோம். எங்கப் பாத்தாலும் வெள்ளக்காடு. மாலை வரை அஞ்சினிக் கரையோரம் எல்லாம் ஜனங்கள் நின்று வெள்ளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆத்தில் கோபுரம் கோபுரமாக நுரைகள் மிதந்தன. வீடுகளின் தகரக் கூரைகள் சப்பு சருவுகள் மனித சடலங்கள், செத்த நாய்கள், குப்பைக் கூளங்கள், வேறுடன் மரங்கள் எல்லாம் மிதந்தன. ஆ! எல்லாம் மிதந்தே ஒழிந்தன!

அஞ்சினி கிராமத்து ஜனங்கள் லோச்சனாவை நெருங்கவே பயப்பட்டார்கள். தொழுநோயின் வர்ணம் தெரியாமல் உடம்பெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு நிற்கும் அவளை யாரும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் ரொம்ப பழக்கமான வெள்ளானை அய்யர் ஆட்டுப் பொண்ணாச்சே அவள்?! அதற்காகவே அவர்கள் அவள் செய்த எதையும் தடுக்கவில்லை. ‘தன்னந்தனியாக மூங்கித் தோப்புக்குள்ள ஒரு பொண்ணு இருக்கவாவுது? ஏழு வாளுமுணி இருக்கு!! அடிச்சுடாது?!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஊர்ப் பெண்கள், “இதென்ன எளவு?! - ஒடம்பெல்லாம் பச்சையும், செவப்புமாக படமெல்லாம் வரைஞ்சுக்குது” அவர்களுக்கெல்லாம் தெரியாது. ராகவன் தான் இதுக்கு “மருந்து” என்று, ஒரு நாளாய், ரெண்டு நாளாய் இருந்தால் பரவாயில்லை. வருஷங்கள் கழிய ஆரம்பித்ததும் ஜனங்களுக்கு லோச்சனா புரிந்து போனாள். ஆளண்டாத முங்கித் தோப்புக்குள் லோச்சனாவுக்காக பால்காரியும், தயிர்காரியும் போனார்கள். கீரைகள் புடுங்கிக் கொண்டுப் போகிற சாலியத் தெரு பெண்கள் அவளுக்கும் நாலு கீரைக்கட்டு கொண்டு போய் கொடுத்தார்கள். ஏகாலிகள் குடி பொண்ணுங்களும், குரும்பனும் வேலி அடைக்கிற முதலாளிகளும் அவளுக்காகவே போய் பேசிவிட்டுப் போனார்கள். அவளே மண்ணைக் குழைத்து சுவர் வைத்தபோது ஆசாரிகளும், கொல்லத்துக்காரர்களும் “அய்யருவூட்டுப் பொண்ணுக்கு வந்த கெதியப் பாத்திங்களா? எல்லா எளவையும் இழுத்துப் போட்டுகிட்டு, இப்டி அல்லாடுது. இதுக்கென்ன விதி வந்துடுச்சு? இந்த மாதிரி ஆள் அண்டாத எடத்துலெ வந்து உக்காந்துகிறதுக்கு?!” - என்றார்கள்.

ராகவன் மிகவும் நல்லவன். எட்டு வருடங்களாக அவளை அண்டுவதே இல்லை! வியாதியாம்! அவளது அடங்காதளத்தைப் பொறுத்துக் கொள்கிறானாம். ஜனங்களும், அவன் தியாகம் செய்கிறானென்று டாக்டர்களை அழைத்துக் கொண்டு, கார்களில் வந்து இறங்கி, அந்த மூங்கில் தோப்புக்குள் வந்து