பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

301


கேக்குறதுக்கு ஒருத்தன் இருந்தாகூடப் போறும்னு வீம்பா நெனச்சிக்குவாரு. கொடல்லேருந்து தான் பாட்டு வரும். வெங்கலம் மாறி கணீருங்கும். ஒரு பிசிறு பிசகு வருமா? ‘சும்மாவா சொன்னான் கொடப்புடுங்கி நாடாவும்’ன்னு தங்கசாமியும் அப்டிதான் கொடல்லேருந்து பாட்டெடுத்து பாட்டெடுத்து வத்துன வவுரும் ஒடம்புமா போயித்தாரு. முட்டம் பெரியசாமியோட தங்கசாமி நடிக்கிறப்பல்லாம் நக்குற வேசமானாலும் பரவால்லன்னுதான் ஆக்கிட்டு பண்ணுவாரு. ராஜபார்ட்டுதான் கெடைக்காதே... குத்தப்போறது கலிக்கி, கமுகக்கட்டி மயிரு தெரியுதுன்னு கவலப்பட முடியுமா? நாய் வேசம் போட்டா கொலச்சிதானே ஆவணும்? நச்சத்திரனா விசுவாமுத்திரனா எந்த வேசமானாலும் கட்டிக்குவாரு. அந்த வேசத்தக் கட்டிக்கிட்டா எம்பியல்லோ குதிச்சாவணும். அதுக்குத்தான் தனி பிராக்கிட்டெல்லாம் பண்ணி குடுத்துருக்காரே. மொட்டவாத்தியாரு. உத்தரத்துக்கு தாவுவாரு. பூமிய கொடையலாம்னா கொடஞ்சிகிட்டு கீழக்கூட போயிருவாரு. எல்லாம் மொட்டவாத்தியாரு தயாருதான். ந்தால நாலடி ஓசறம் முளுசாருப்பாராள்னுதான் சொல்லணும். கன்னங்கரேல்னு காரித்துப்புனா காக் காசுக்கு பொறமாட்டாரு. அந்த மனுசன் எம்புட்டு வித்தையெல்லாம் கத்து வச்சிருந்துருக்காரு. பாவம் பத்து பதுனஞ்சி வருசத்துக்கு முந்தியே செத்துப் போயித்தாரு.. செத்த எடம் புல்லு மொளச்சி பூச்சி மரமாவும் போயித்தாரு. மரத்துலதான் மொட்ட வாத்தியாரு குந்திருக்காருன்னு நெனச்சிகிட்டு தங்கசாமி, வருசத்துக்கு கொருக்கா மால கூட கட்டிப்போட்டுட்டு வருவாரு. தங்கசாமி ஒரு தபா ஸ்திரீ பார்ட்டா ஆக்கிட்டு பண்ணனும்னு ஆசப்பட்டு காக்காமுளி கோயிந்தசாமி பிள்ளையோடயே சுத்தி திரிஞ்சாரு. அந்த காக்கமுளி கோயிந்தசாமி எப்டிபட்டவருன்னா சந்திரமதியா வேசம் கட்டிக்கன்னு பொறந்த மனுசன் அவுரு ஒருத்தருதான்னு சொல்லணும். பொம்பள மாறியே கீச்சுக்கொரல்லதான் பாடுவாரு. சாரீரம் சுத்தமாவும், கேக்குறதுக்கு ஏஞ்சிப்பாவும் இருக்கும். அநேவமா முட்டம் பெரியசாமி; கஞ்சனூரு முத்துக்குமர பத்தரு; பிளேட்டு கதிரேசம் பிள்ளை; பசுபதிகோயிலு கதிரேசன் காடவராய்ரு இவுங்களுக்கு ஜோடியா ஸ்திரீ பார்ட்டுல நடிப்பாரு. சந்திரமதிய தவுர வேற பாத்திரங்கள்ல நடிக்கமாட்டாரு. மயான காண்டத்துல லோகிதாசன பறிகுடுத்துபுட்டு கதர்ற கட்டத்துல பின்னிபுடுவாரு பின்னி ஆசாமி.

அவுரு ஸ்திரீ பார்ட்டா வேசம் கட்டிக்கிட்டு மேடையில் வந்து நின்னா ஆம்பளையெல்லாம் ஆ...ன்னு வாயப் பொளந்துகிட்டு பாத்துகிட்டிருப்பானுவ. அசல் பொம்பளை தோத்துப் போயிருவா. அடா அடா என்னா நடை என்னா ஒயிலு- குலுக்கறதும், மினுக்குறதும் காக்கா முளி கோயிந்தசாமியால