பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

315


கத்தை கத்தையாக இருக்கிறது என்றும் சொல்லி, வீட்டுக்கு வந்து அந்தக் கடிதங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் காட்டினானாம் சண்முகம். இது எல்லாவற்றையும் அவன் மனைவி தெருவில் நின்று கொண்டு அடிக்கடி ரூபவதி வீட்டுப் பக்கம் மண்ணை வாரித் தூற்றிக் கொண்டே சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். போலீசார் ரூபவதியையும் வந்து அழைத்துக்கொண்டு போனார்கள். அவளுடன் அவள் கணவரும் போனார்.

ஸ்டேஷனிலிருந்து ரூபவதி தம்பதியர் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது எதேச்சையாக நான் வாசலில் நின்று கொண்டிருந்தேன். (எதேச்சையாக என்பதை என் மனைவி ஆட்சேபிப்பாள். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எனக்கு அவசர ஜோலி எதுவும் இல்லை என்று சொன்னாலும் கூட அவளிடம் எடுபடாது.) ரூபவதியின் கணவர் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். ஒரு வெற்றிப் புன்னகை மாதிரி இருந்தது. என்னுடன் ஏதோ பேச விரும்புகிறார் போலவும் தோன்றியது. பதிலுக்கு நானும் பூத்து வைத்தேன். உடனே ‘சிக்னல்’ கிடைத்துவிட்டது போல், “அந்தத் தறுதலைப் பயலை எனக்கு யாரென்றே தெரியாது. அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக வந்து என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறான் என்று ஸ்டேஷனில் சொல்லி விட்டார். சார் இவள்” என்று பெருமிதத்துடன் தன் மனைவியைச் சுட்டிக்காட்டி என்னிடம் சொன்னார்.

நான் பதிலுக்கு, ‘அப்படி என்றால் உங்கள் மனைவி அவனுக்கு எழுதின கடிதங்கள்?’ என்று கேட்க வாயெடுத்து, ஆனால், அது அவ்வளவு நாசுக்கான தல்ல என்பதை உடனே உணர்ந்தவனாய், “அப்படீங்களா? அப்படீன்னா சரி” என்று சொல்லி தலையை பலமாக ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு உள்ளே போனேன்.

இனிமேல், ரூபவதியின் வீட்டுப் பக்கம் போனால் தோலை உரித்து விடுவோம் என்று மிரட்டி போலீசார் சண்முகத்தை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்ற செய்தி காதில் விழுந்தது.

ஆனால், அதற்குப் பிறகும்கூட சண்முகத்தின் சைக்கிளை எதிர் வீட்டில் பார்த்த போது தான் விஷயம் சீரியசாகிவிட்டது புரிந்தது. என்னதான் எனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனையாக இருந்தாலும், சண்முகத்தின் மனைவியின் இடுப்பிலேயே எப்போதும் தொற்றிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் ஞாபகம் வந்து என் வயிற்றைக் கலக்கியது.

பிறகு, போலீசார் மறுபடியும் வந்து சண்முகத்தை அழைத்துப் போனார்கள். போலீசாரை ரூபவதியின் கணவர் நன்றாக கவனித்து விட்டார் என்று தெருவில் பேசிக்