பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சோலை சுந்தரபெருமாள்


“அப்படியானால் ஐயா அரையனாக் கொடுப்பாரு. நான் வாத்தியம் வாசிக்காதிருப்பேன்!” என்றான் மனிதன்.

இப்போது அவன் குரங்கின் விலாவில் குத்தவே அது ஓடிவந்து தன் தலையில் இருந்த குல்லாவை எடுத்து நீட்டியது.

மறுபடியும் தோல்விதான். சட்டைப் பையில் கை விட்டுக் காலனாக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். இதற்குள் குரங்கின் கவனம் பக்கத்திலிருந்த வாழைப்பழத்தின் மேல் போய்விட்டது. அப்பொழுது எனக்கு அருமையான ஒரு யோசனை தோன்றிற்று. கிழவனிடம் பெற்ற ஜீவரசத்தை இந்தக் குரங்குக்குக் கொடுத்து ஏன் பரிசோதிக்கக் கூடாது என்பதுதான் அந்த யோசனை.

சட்டென்று ஒரு வாழைப்பழத்தை உரித்து, குரங்காட்டிப் பாராமல் புட்டியிலிருந்து அதில் கொஞ்சம் மருந்து ஊற்றி குரங்கனிடம் கொடுத்தேன். குல்லாவில் அரையனாவும் போட்டேன். அடுத்த கணத்தில் குரங்கு என் எஜமான் தோளுக்குப் போயிற்று; வாழைப்பழம் குரங்கின் வயிற்றுக்குப் போயிற்று; குரங்காட்டி என்னை வாழ்த்திக்கொண்டே போனான். “இவ்வளவுதானா? ஒன்றும் இல்லையா!’ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

ஆனால் குரங்காட்டி கொஞ்ச தூரம் போய் நின்று குரங்கனிடம் ஏதோ வாதமிடுவதைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தேன். ஆகா? இதென்ன விந்தை? பழைய குரங்கு எங்கே? இந்த பெரிய குரங்கு எங்கிருந்து வந்தது? குரங்காட்டி எதோ தந்திரத்தினால் தான் இந்தப் புதிய குரங்கைக் கொண்டு வந்து விட்டானா? அப்படியிருக்க முடியாது. ஏனெனில் குரங்காட்டியிடம் என்னைப் போலவே அதிசயமடைந்தவனாய்க் காணப்பட்டான். அவன் குரங்கைக் கீழே இறக்கிவிட்டு அதைப் பார்த்து ஏதேதோ ஹிந்துஸ்தானி பாஷையில பேசினான்.

நன்றாகக் கண்ணை துடைத்துக் கொண்டு பார்த்தேன். முன்பு பார்த்த குரங்கைவிட இது மூன்று மடங்கு பெரியதாயிருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் அது வளர்ந்து வந்ததுடன் உருவமும் மாறி வந்தது. இப்போது குரங்காட்டியின் மார்பு அளவுக்கு அது உயர்ந்து விட்டது. அதன் முதுகு வளைவு மறைந்து போயிற்று. கால்கள் நிமிர்ந்து வந்தன. ஆனால் குல்லா பழைய குல்லாதான். சட்டையும் பழைய சட்டைதான். ஆனால் உடம்பு பருத்த போது சட்டை தாறுமாறாய்க் கிழிந்து விட்டது. எனவே பழைய குரங்குதான் இப்படி வளர்ந்து வருகிறதென்பதில் சந்தேகமில்லை. வாயைப் பிளந்த வண்ணம் இந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

குரங்க அல்லது மாஜி குரங்கு இன்னும் சில நிமிஷத்தில் தன் எஜமானின் தோளளவுக்கு வந்து, அவன் முகத்தை வினோதமாக உற்றுப் பார்க்கத் தொடங்கிய போது அதற்கு மேல்