பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/332

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

சோலை சுந்தரபெருமாள்


“யாரது? வெறும் வார்த்தைகளை விடுத்து நெஞ்சில் ஆயிரம் அர்த்தங்களாய் விகசித்துப் பரவும் அம்புகளாய் மாற்றும் இந்தத் தஞ்சாவூர்த்தனம். ஓ...ஜோஸ்யர் மாமா.”

“எங்கேடா இருக்கே. என்ன பண்ணிட்டிருக்கே, இப்போ ஊருக்கு நான்தான் பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட். நான் வந்துதான் ஊரையே தலைகீழா மாத்தினேன். மழை பேஞ்சா இந்தப் பாதையிலே நடக்கமுடியுமா முந்தி. இப்ப பாரு தாரு போட்டாச்சு. சிவன் கோயில் பாழடைஞ்சு கிடைந்ததே இப்ப பாரேன் எப்படியிருக்குன்னு. போனவருஷம்தான் கும்பாயிஷேகம் ஆச்சு. முந்தியெல்லாம் செம்பு ஜெலத்துக்காக யப்பாடி யம்மாடின்னு மூணு மைலும், நாலு மைலும் வேர்க்க விருவிருக்க நடப்போமே. இப்போ பாத்தியா கௌதமன் கொளத்தை... ஏகமாக செலவு பண்ணி தூர் எடுத்து பளிங்கு மாதிர ஜலம்... குடிக்க மட்டும் தான்னு ஊர்லே ஸ்ட்ராங்கா சட்டம் போட்டு காவலும் போட்டு... எலே... நாம் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன். நீ மரமாட்டமா நிக்கறே... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நம்ம மனுஷனாச்சேங்கர விஸ்வாசத்திலே உன்னை நிறுத்திப் பேசறேன் பாரு என்னை ஜோட்டாலே அடிக்கனும்... எலே ஓட்றா வண்டியை. மகாராஜா பிரவேசம் பண்ணியிருக்கார். ஊருக்கு இனிமே பிரளயமோ, பூகம்பமோ”

அடிமனதில் கசப்பு தட்டுவதை உணர்ந்தான். சந்திக்கும், எதிர்படும் எட்டிப்போகும் கேள்விப்படும் ஒவ்வொரு மனுஷனும் கிழக்கட்டைகளும் கூட பதினைந்து வருஷத்திய நினைவை மாறாமல் வைத்திருந்து துவேஷத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தார்போல்-

யாரு ரங்கஸ்வாமியா?

யாரு ரங்கஸ்வாமியா வந்திருக்கான்? சரிதான் ரங்கஸ்வாமி வந்துட்டானோன்னோ?” “ரங்கு நாள் முழுக்க இப்படியே இருந்துடுவோம்டா... எந்திருக்காதேடா... எந்திருக்காதேடா... மாமாகூட ஆத்திலே இல்லேடா.”

உறைபனியின் தன்மையும், ஜன்னல் வழியாகப் பிரவேசிக்கும் காலை வீச்சுக்களின் இதமான சூடும் உடம்புகளில் சங்கமிக்கும் போது எத்தனை சுகம்? இந்த சுகத்திற்காகத் தொலைத்த விஷயங்களைக் கணக்குப் பார்க்கும் நேரமா இப்போ ....

‘அப்படியே போங்கடி. உள்ளே.... வாசல்லே என்ன அவுத்துப் போட்டுண்ணா ஆடறா. வாசல்லே வாசல்லே வந்து நின்னுண்டு... காலை முறிச்சுப் போட்டா சரியாப் போயிடும்’ என்று மனைவி, மகள்களை, தங்கைகளை, அக்காக்களை உள்ளே அவசர அவசரமாக விரட்டிவிட்டு நடுவாசலுக்கு வந்து கரிசனமாய்