பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சோலை சுந்தரபெருமாள்


பிறகு சிறிது சிரமப்பட்டு “இன் இன் இன்னும் கொஞ்சம்!” என்றான்.

ஆதிகாலத்தில் முதன் முதலில் தோன்றி மனிதசாதி தமிழ்மொழி தன் பேசிற்றென்று ஒரு தமிழ்ப் பிரமுகர் கூறுவது எனக்கு நினைவு வந்தது. அது உண்மையாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது குறித்து அதிக நேரம் சிந்திப்பதற்கு தருணம் அதுவன்று. இன்னும் கொஞ்சம் ஜீவரசம் குடித்துவிட்டால் என்ன விளையுமோவென்ற பீதி எனக்கு உண்டாகி விட்டது. ஆகையால் புட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றேன்.

ஆனால் முயற்சி பலிக்கவில்லை. வலிமை பொருந்திய ஒரு கை என்னைப் பிடித்து இறுத்திற்று. மற்றொரு கையால் அவன் புட்டியைப் பிடுங்கி அதிலிருந்த ஜீவரசம் முழுவதையும் குடித்துவிட்டான். பின்னர் அவர் என் கைப்பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த என்னுடைய மாற்று உடைகளை எடுத்து அணிந்து கொண்டு, மறுபடியும் கீழே உட்கார்ந்தான். என் மூளைத் திருவிழாக் காலங்களில் திருக்குளம் குழம்புவது போல் குழம்பிற்று. அது அடியோடு சிதறப் போகாமலிருக்கும் பொருட்டு நகரம், கலாசாலை, என்னுடைய ஆசிரியன்மார் முதலியவர்களைப் பற்றி எண்ணினேன். எனக்கு நேர்ந்திருக்கும் இந்த நிலையை என் விஞ்ஞான ஆரியரால் கூடச் சமாளிக்க முடியாது என்று கருதினேன்.

“ரொம்பநல்லது!” என்று அக்குரங்கு மனிதன் தூயத் தமிழில் பேசினான். பிறகு ஏதோ அபூர்வ ஐந்துவைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துவிட்டு “நீ என்ன, பழைய கர்நாடகமாய் இருக்கிறாயே!” என்றான்.

ஒரு கூத்தாடிக் குரங்கு என்னைப் பார்த்து பழைய கர்நாடகம்” என்று சொல்லுமென்று கனவிலும் கருதியதில்லை. எனவே அக் கேள்வி என்னைத் தூக்கி வாரிப் போட்டது. அப்போது என் மடியிலிருந்து டார்வின் புத்தகம் கீழே விழுந்தது.

“ஓஹோ மாண்டுபோன ஆங்கில மொழியா? என்றான் அம்மனிதன். நிமிஷத்துக்கு நிமிஷம் என் வியப்பு அதிகமானது போல் அவன் உருவமும் மாறி வந்தது. பழைய காட்டுமிராண்டி வடிவம் போய்விட்டது. அவன் தேகம் மெலிந்து மேன்மையாகியிருந்தது. மண்டை அசாத்தியமாகப் பெருத்துவிட்டது. கண்களும் அப்படியே வாய் மிகவும் சிறுத்திருந்தது. விரல்கள் மெலிந்து நீண்டிருந்தன. தலையில் இருந்த சிறுகுல்லா ஒன்றுதான் அவன் சற்று நேரத்திற்கு முன் குரங்காயிருந்தான் என்பதை எனக்கு நினைவூட்டிற்று.

இந்த நினைவு வந்ததும் மறுபடியும் ஒரு நிமிஷம் சிந்தனை செய்தேன். வளர்ச்சி அதிவேகமாக நிகழ்ந்து