பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

345


மௌனமான செயல் துணுக்கோ, அவளோடு தொடர்பு கொண்டிருந்திருக்குமென கருதினான். குறைந்தபட்சம் ரயில் நிலையப் பாலத்தின் உயரமான படிக்கட்டுகளில் அவன் புகைத்தபடி நிதானமாக நடக்கும்போது பின்னிருந்து அவனை உந்தித் தள்ளி நாகரீக வார்த்தையில் எரிச்சலைத் துப்பி விட்டு முன்னேறும் மனிதர்களில் அவளும் ஒருத்தியாயிருந்திருக்கலாம். பிற்பாடு அவள் புதைக்கப்பட்ட மயானமறிந்து அவளுக்குப் பிரியமான எதையாவது சமர்ப்பித்துவர விருப்பமெழுந்தது. படம் வரையும்போது வெகுநாட்களாக தூரிகையைத் துடைப்பதற்காக உபயோகப்படுத்திய துண்டில் அற்புதமான நிறச்சேர்க்கையில் ஒரு ஓவியம் சம்பவித்து அவனது கவனத்திற்காகக் காத்திருந்ததை சில தினங்கள் முன்புதான் கண்டுபிடித்திருந்தான். அதைப் போர்த்துவதும்கூட சிறந்ததாக அமையும். ஒரு கனவை அவிழ்த்துப் பரத்தியது அந்த இரவு.

கண்ணுக்கெட்டியவரை மரங்களேயில்லாத வெளியில் ஏக்கப்பிரவாகமான அழுகுரல் மிதக்கிறது. பாதங்களில் கீழே கரிய நிலத்தில் வெடிப்புகளில் நாறும் நிணம். வெயிலைத் தடவியுணர்ந்து ஊடுருவ முடிந்தது. ஒரு கைக் குழந்தையைத் தோளில் தாங்கி அவன் நடந்து கொண்டிருக்கிறான். குழந்தையில் தலை வழவழப்பாய் ரோஜா நிறத்தில் மின்னுகிறது. சற்றும் எதிர்பாராமல் நில வெடிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி பெரும் பள்ளங்களாகின்றன. பள்ளத் திரவத்திலிருந்து தோன்றி மேல் வந்து அலைகின்ற குழிழ்கள் ஒவ்வொன்றாய் வெடிக்கும் போது ஜனிக்கும் அழுகுரல். பேராசையான அவலக்குரல்களின் தாபம் எங்கும் நிறைகிறது. பிரிந்து கொண்டிருக்கும் நிலத்தட்டுக்களின் மீது தாவிச் செல்கையில் அதிர்வு தாங்க மாட்டாத குழந்தையிடமிருந்து மெல்லக் கசிகிறது. அழுகை. வெளி நிசப்தமானது. ஒரே குரல். அது குழந்தையிடமிருந்து வந்தது. குழந்தையின் கண்ணீர்ச் சொட்டு திட உருவில் தரை தொட்டவுடன் எழுந்த புகை தூண் போலாகி - குழந்தையின் தலையும் நிலவெடிப்புகளைப் போல விரிசல் காட்டுகிறது. குழந்தையின் அழுகுரல் ஓலமாய் வலுப்பதற்கேற்ப தலைவெடிப்புகள் ரத்த விளிம்புகளுடன் - அதிகரிக்கின்றன. மிரளும் அவனின் கலவரமான தேற்றுதல் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் கதறுகிறது குழந்தை .. அவனில் மரண பயம் கவிந்தது. அவனுக்கே விளங்காத பிதற்றலாய் குழந்தையிடம் மன்றாடி முடியாமல், நிர்தாட்சண்யக் கண்களுடன் இமைக்காமல் வெறித்தழும். குழந்தையின் தலையில் முழுச் சக்தியுடன் குட்டுகிறான். குட்டு விழுந்த இடம் சில்லுபோல் நொறுங்கி ஓட்டை விழுவும்--அந்த ஒழுங்கற்ற .சதுரத்திற்குள் வெண்குழைவு அடர்ந்து கொதிக்கிறது. அது மேலேறி.. வழியும்போது புலரும்