பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

87


அவருடைய பெரிய பையன் படித்து விட்டு உத்தியோக வேட்டையில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். மற்றவர்கள் இன்னும் சிறுவர்கள் தான்.தன் மனைவியோ வெனில் ......சுத்த அசடுதானே!

திடீரென்று எழுந்து உள்ளே காப்பி சாப்பிடச் சென்றார். வீடே வெறிச்சென்று தோன்றியது. மனைவி காப்பி வைத்துவிட்டுப் போனதும், ஏதோ சொப்பன உலகில் ஊமையாக நடப்பதுபோன்று தான் தோன்றியது. சந்தனக் கல்லடி காலியாக இருந்தது. காப்பி குடித்துவிட்டு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அவர் மனைவி, பாத்திரங்களை எடுத்துப்போக வந்தபோது எதிரே எங்கேயோ ஆகாயத்தைப் பார்ப்பது போல உட்காந்திருந்தார். சிம்னி இல்லாது தொங்கிக் கொண்டிருந்தது கூடத்தில் பவர்லைட்! ‘மூன்று நாளாச்சி, கிளாஸ் உடைந்து- சொன்னால் மறந்து விடுகிறீர்களே’ என்று பாத்திரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் மனைவி உள்ளே போக ஆயத்தப்பட்டவள், அவர் எதையோ உற்றுநோக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

மூன்று நாளாய் அவள் சொல்லியதும் மறக்கும்படியாகத் தான் இருந்தது. கிருஷ்ணய்யருக்கு அவள் சொன்னது போலவே இல்லை. தன் தாயார் சொல்லியிருந்தால்...? தான் மறந்திருந்தால்-? அவர் மனது என்னவெல்லாமோ யோசித்தது நான்கு வருஷத்துக்கு முன் ஊரார் கூடிப் பெருமாள் கோவிலில் ஏகாதசி இரவு பஜனை செய்ய எண்ணினார்கள். அது விட்டு விட்டுத் தூங்கும் பக்தி சிரத்தையின் ஒருவிதத் திடீர் ஆரம்பம். இவர் லீட்டு பவர்லைட் இரவல் போயிற்று. அது அவர் தாயாருக்குத் தெரியாது. அன்று இரவு அவர் சாப்பிடும்போது தூணடியில் அவர் தாயார் உட்கார்ந்து பலகாரம் செய்துகொண்டு இருந்தாள். கிருஷ்ணய்யரின் மனத்துள்ளே, ஏதோ சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிச் செல்லாது அடக்கப்பட்டதினால் ஏற்பட்ட ஒரு வேகம். அவர் அறியாமல் சொன்னவர் போன்று ‘அம்மா கோவிலுக்கு பவர்லைட்’ என்று ஆரம்பித்தவர், சொல்லி முடிக்கவில்லை . அவர் தாயார் சொன்னாள், ‘எதையும் எரவல் கொடுத்துவிடு. ஏன் வாங்கணும்? தொலைக்கத்தானே...’ அப்போது அவருக்குச் சிறிது கோபம்தான். இருந்தாலும் அவள் சொன்னதில் என்ன பிசகு இருக்கிறது என்பதில் சந்தேகம். அவளிடம் ஏன் சொல்லவேண்டும்? சொன்னால் தானே, அவள் சொல்வதற்குக் காரணமாகிறது? அது ஒரு விநோத விஷயம்தான் — தாயாருக்கு தெரியப்படுத்துவது என்பது. எதில்தான் என்ன பிசகு. தன் தாயாருக்குத் தெரியாது, தெரியப்படுத்தாது இருந்தால்? ஆனால் அவ்வகையில் தான் குடும்பம் நடத்தினால் நாசகாலம் தான். அவருக்குத் தன் குடும்பத்தில் தன் தாயார் வகிக்கும் பொறுப்புத் தெரியும். அவள் சொல்வதில் என்ன பிசகு என்பதைத்தான்