பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

89


முடியவில்லை. அப்படி அவள் இல்லாது நடத்தும் வகையும் தோன்றவில்லை. தான் அந்த இடத்தைக் கொள்ள வேண்டின், தன் பொறுப்புகளைத் தன் கீழ்வாரிசுகள் கொள்ளவேண்டும். அதற்கோ ஒருவரும் இல்லை. இருந்தும் தன் தாயாரைப் போன்று தான் அவ்வளவு நன்றாகப் பாதுகாப்பளிக்க முடியுமா? இரவில், கூடத்துக் குத்துவிளக்கின் ஒளிபடராத பாதி இருளில் அவன் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருப்பாள். உள்ளே குழந்தைகள் தாயாரிடம் விஷமம் செய்துகொண்டு அவளைக் காரியம் செய்யவிடாது உபத்திரவம் செய்யும் போது, குழந்தைகளைக் கூப்பிட்டு கதை சொல்வதும்.... அடிக்கடி குழந்தைகள் உடம்பு இளைத்துவிட்டது என்று நாட்டுப் பெண்ணைக் கோபித்துக் கொள்வதும், இவ்வகையில் தன்னால் கவனம் செலுத்தமுடியுமா என்பதை அவர் நினைக்கும்போது யோசிக்க, யோசிக்க, கிருஷ்ணய்யர் வீடே தன் தாயாரால் நிரப்பப்பட்டிருந்தது போன்ற தோற்றத்தைத் தான் உணர்ந்தார். அவள் இறந்ததை எண்ணும்போது தன் பலவீனத்தைக் கண்டார்.

வெளியில் தான் எவ்வளவு கெட்டிக்காரரெனத் தோன்றுவதற்கு ஒரு உரைகல் போலவிருந்த தாயார் போய்விட்டாள்.

எழுந்து கதவைப்பூட்டிக்கொண்டு கொல்லையில் வேலை செய்யும் தச்சனைப் பார்க்கப் போனார். கொட்டிலில் கட்டப்படாத மாடுகளில் ஒன்று கடந்த அரைமணி நேரமாக தவிட்டைத் தின்று கொண்டிருந்தது. ‘மாடு வந்திருக்கு கட்டு’ என்று முன்பு தன் தாயார் சொல்லுவதை ‘அனாவசியமாக ஏன் சொல்லுகிறாள் ? கட்டமாட்டார்களா’ என்று மிகுந்த அலட்சியமாக எண்ணியவர், கண்கூடாக அவள் வார்த்தைகளின் மதிப்பைப் பார்த்தார். கொல்லையில் சாவதானமாக வீட்டு வேலைக்காரன் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தான். உள்ளே அவர் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். மாடுகளைக் கட்டிவிட்டு கொல்லையில் சென்றபோது, தச்சன் வேலை செய்யாது வெற்றிலை போட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருந்தான். அவனைக் கடிந்து, வாயிற்பக்கம் பார்த்துக்கொண்டே அங்கு உட்கார்ந்தார். கொல்லையில் வேலையை கவனிக்கும்போதும், வாயிற்பக்கத்தில் கவனிப்புக் கொள்ளவேண்டியிருக்கிறது. எவ்வளவு சமாதானத்தோடு முன்பு வீட்டை விட்டு வெளியே போகமுடியும் என்பதையும் வருகிறவர்கள் போகிறவர்களுக்கு எவ்வளவு சரியானபடி தன் தாயார் ஜவாப்பு சொல்லுவாள் என்பதையும் நினைத்துக் கொண்டார். ‘அந்தக் கர்நாடகம்’ என்று அவளை அடிக்கடி இவர் சொல்வது உண்டு.

ஆனால் அப்படியல்ல. நாகரிகத்தையும், நாகரிகத்தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டுகொள்ளாமல் இல்லை. கண்டுகொள்ள அவைகளைப் பயன்படுத்தும்