பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சோலை சுந்தரபெருமாள்


வகையில்தான் வித்தியாசம். சூன்ய மூளையில், அழகற்று மிருகவேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம், அவளிடம் தன் சக்தியைக் காட்டமுடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட, மிருதுவாக உறைந்த குடும்ப லஷியங்கள் உருக்கொண்டவள் போன்றவள்தான் அவள். வெற்று வெளியிலும், தாழ்ந்த இடத்திலும் பாய்வது போலவன்றித் தணிவு பெற்ற, அழகுபட, அமைதியுடன்தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும். திடீரென்று தோன்றும் பச்சை எண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும் பதனிடாமல் ஏற்று வழங்குவது முடியுமோ குடும்பங்களினால்?

அவளைவிடப் புதுக்காலத்தின் முன்னேற்றத்தின் உயர் அம்சங்களை உணர்ந்தவர்கள் இல்லை. வெகு நாட்கள் முன்பே, வீட்டில் மணி அடிக்கும் கடியாரம், அவள் தூண்டுகோலின் பேரிலே வாங்கப்பட்டது. அதனால் அவளுக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை. பகலில் முற்றத்தில் விழும் நிழல்தான் அவளுக்குக் கால அளவு. இரவிலோ வெனின், அவளுக்கு நஷத்திரம் பார்க்கத்தெரியும். அருணோதயத்திற்கு இன்னும் எவ்வளவு நாழிகை இருக்கிறது என்று அவளால் தெரிந்து கொள்ளமுடியும். வாங்கியபின், அநேகர் மணி பார்க்க வருவதுண்டு. அதில்தான் அவளுக்கு மிகுந்த திருப்தி. சிறுவயதில், குடும்பத்தின் கெளரவ எண்ணங்களை, குழந்தைகளுக்குச் சொல்லுவாள். அதனால்... குடும்பத்தில் பழைய நினைவுகள்... குத்துவிளக்கடியில் குழந்தைகளுக்குச் சொல்லும்போது... அறிவுக்கெட்டாது திகைப்பில் காலத்தில் மறைந்த பழைய பழைய கதைகள்... அவளுடைய மாமிப் பாட்டி அப்படி இருந்தது... பெரிய மாமனார் காசிக்கு ஓடிப்போனது... எவ்வளவு தூரம் தன் மதிப்பு, குடும்ப மதிப்பு, ஆரோக்கியமான போதனைகளை, குழந்தைகள் மனத்தில் பாலூட்டுவது போன்று, ஊட்டிவந்தாள்!...

சாயங்காலம் ஆகிவிட்டது. கொல்லைக் கதவுகளை பூட்டிக்கொண்டு வாயிற்பக்கம் வந்தார். அப்போது அவருடைய தூர பந்து ஒருவர், அவர் தாயார் இறந்த துக்கம் விசாரிக்க வந்தார். அவரோடு பேசும்போதே கிருஷ்ணய்யருக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது. வந்தவருக்கு இது வியப்பாகத்தான் இருந்தது. ‘என்னடா கிருஷ்ணா! பச்சைக் குழந்தையைப்போல, அம்மாவை நினைத்துக்கொண்டு...! உன்னுடைய திடசித்தம் எல்லாம் எங்கே?’ என்றார் அவர்.

ஆனால் கிருஷ்ணய்யருக்கன்றோ, தன்னுடைய அவ்வளவு வெளியுலகப் பெருமைகளுக்கும் காரணம் மறைமுகமாக வீட்டினுள் இருந்தது, யார் என்று தெரியும்.

அவர் போனபின், என்ன நினைத்தென்ன என்று ஒரு பெருமூச்செறிந்தார் கிருஷ்ணய்யர். அவர் துக்கமெல்லாம், சிறு