பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஏகோஜி, வழியில் ஆரணியை வென்றுகொண்டு தஞ்சை நோக்கி வந்தார்; தஞ்சைக்கு அருகில் அய்யம்பேட்டையில் அளகிரியின் தானையைத் தோல்வி யுறச்செய்தார். அளகிரியும் கோட்டையை விட்டோடினார். ஏகோஜியும் தஞ்சையைக் கைப்பற்றினார்: செங்கமலதாசைத் தஞ்சைக்கு அரசன் ஆக்கினார்; பல பரிசுகளைப் பெற்றுக்கொண்டு கும்பகோணத்தில் தங்கி இருந்தார்." செங்கமலதாசு தன்னை வளர்த்த நாகப்பட்டினத்தாரை அமைச்சராகவும் தானைத்தலைவராகவும் ஆக்கினார். ராயலம் வெங்கண்ணா இது குறித்து வருந்தினார் ; செங்கமலதாசுக்குப் பாடம் கற்பிக்க நினைத்து, ஏகோஜியை அனுப்பித் தஞ்சையைக் கைப்பற்றி அரசு கட்டிலேறுமாறு வேண்டினார். ஏகோஜி முதலில் மறுத்தார்; பின்னர்த் துணிந்து தஞ்சைக்குச் சென்று அரசைக் கைப்பற்றினார். இது கி. பி. 1676இல் நிகழ்ந்தது. ஏகோஜியின் தந்தை ஷாஜி கட்டளைப்படி ரகுநாத் நாராயண் ஹனுமந்தே என்பவர் ஏகோஜிக்கு உதவியாக இருந்தார். எனினும் ஏகோஜியின் போக்கு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர் சிவாஜியிடம் சென்று அவர்க்கு உதவியாக இருக்கத் தொடங்கினார். சிவாஜி, ஏகோஜிக்கு உரிய நாடுகளில் சரிபாதி தான் பெறவேண்டும் என்று கருதினார்; பல தடவை கேட்டனுப்பினார். ஏகோஜி கொடுப்பதாக இல்லை. சிவாஜி 1676இல் தென்னாட்டின்மேல் படையெடுத்துச் செஞ்சியை (GINGEE வென்றார் ; பின்னர் வேலூரைத் தாக்கினார்; வாலிகண்டபுரத்துத் தங்கி அரசாண்ட ஷெர்கான் லோடியைப் LIGll இடங்களில் பொருது பல இடங்களை வென்றார் திருமழபாடியில் தங்கினார்; தன்னை வந்து காணுமாறு ஏகோஜிக்கு எழுதினார். ஏகோஜியும் சென்றார். சிவாஜி தனக்குரிய பங்கைக் கொடுக்குமாறு கேட்டார். ஏகோஜி மறுத்தார். சிவாஜிக் குரிய சினத்துக்கு இரையாகாமல் இருக்க ஏகோஜி கொள்ளிடத்தைக் கடந்து தப்பி ஓடிவந்துவிட்டார். சிவாஜி ஏகோஜியின் அமைச்சரைச் சிறைப்படுத்திப் பின் விடுதலை செய்தார் ; கொள்ளிடத்துக்கு வடக்கிலுள்ள பகுதிகளை யெல்லாம் தனக்குரியதாக ஆக்கிக்கொண்டார்; ரகுநாத் நாராயண் என்பவரிடம் வென்ற பகுதிகளை ஒப்படைத்தார். அந்நாளில் மராட்டியப் படைக்கும் ஏகோஜிக்கும் ஒரு போர் நடந்தது. முதலில் ஏகோஜி வென்றபோதிலும் மராட்டியப்படை ஏகோஜியின் படையை முறியடித்தது. படைச் செலவுகளுக்குத் தொகை கொடுக்குமாறு கேட்டுத் திருமழபாடியில் தங்கி யிருந்தார் என்று போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறும் -பக்கம் 75, (சரசுவதி மகால் வெளியீடு, 1980).