பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 செய்யலாம் என்று தல மகாத்மியத்தில் இருக்கும் குறிப்பைத் தேடி எடுத்து அக்குறிப்பைக் காட்டி மீண்டும் காளத்திக்கு வருங்கால் இத்தகைய தடை நீக்கப்பெற வேண்டும் என்று கவர்னர் ஜெனரலுக்குக் கடிதம் எழுதினார். பின்னர்க் கவர்னர் ஜெனரலிடம் கல்கத்தாவில் விடைபெற்றுக் காசி யாத்திரை தொடர்ந்து செல்கையில் கவர்னர் ஜெனரலும் திருக்காளத்தியில் மன்னரது பெருமைக்கேற்ப இறைவழிபாடு நடைபெறும் என்று கூறியதாக உள்ளதால், மன்னரது மனக்கருத்து நிறைவேறியதாகவே கருதலாம். 25-3-1822இல் இரண்டாவது முறை காளத்திக்குச் சென்றுள்ளார்: அ. ... கல்கத்தாவில் 25-7-1821இல் எழுதிய கடிதத்தில் கல்கத்தாவில் நிகழ்ந்த செய்தி களின் சுருக்கம் தரப்பெற்றுள்ளது. அந்நாட்களில் கவர்னர் ஜெனரல் தங்கியிருந்த தலைநகர் கல்கத்தா வாகும். அங்கு ஸல்காகாட்" என்ற இடத்தில் மன்னர் முகாம் செய்தார்; மன்னருக்கென்று ஏற்பாடு செய்யப்பெற்ற பங்களாவில் தங்கினார்; பின்னர்க் கவர்னர் ஜெனரலை நேரில் பார்த்தார்; ஒருவர் மற்றொருவரை நலன் விசாரித் துக்கொண்டனர். பின்னர், மன்னர், கவர்னர் ஜெனரலிடம் தமக்கு ஒரே மகன் என்றும், ரெஸிடெண்டு சாஹேப் இடம் ஒப்புவித்துத் தாம் யாத்திரையில் வந்திருப்ப தாகவும், தம்முடைய மகன் தம்முடைய சிங்காதனத்தை அடையவேண்டும் என்றும், அரசாங்கத்தின் தயவுக்குத் தம் மகன் உரியவராக வேண்டும் என்றும் கூறியதற்கேற்பக் கவர்னர் ஜெனரல் ஆனவர் கைமேல் கையைக் கோத்து நம்பிக்கையைக் காட்டினார்". கல்கத்தாவுக்குச் சென்றபொழுது ஸல்காகாட்டில் ஸல்காகாட்டின் ஜட்ஜ் ப்யாரவேல் அவர்கள் எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்". இது 23-2-1821இல் நிகழ்ந்தது. 26-2-1821இல் கல்கத்தாவுக்குப் போகவர இரண்டு கப்பல்கள் நியமனம் செய்யப்பெற்றன. கல்கத்தாவைச் சுற்றிப்பார்க்க நான்கு சாரட் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பெற்றன. ப்யாரவேல், சென்னையினின்று வந்த ஜார்ஜா ஸ்ட்டன், ஜிவாஜி மொஹிதே ராவ் சாஹேப், பாபுராவ் இங்களே, ராமராவ் ஜாதவ், ஐயாக் கண்ணுப்பிள்ளை, தாவத்பிள்ளை ஆகியோர் உடன் சென்றனர். கப்பலில் எதிர்க்கரையை அடைந்தனர். பாரசீகச் செயலாளர் பிரின்சிப் சாஹேப், மன்னரை எதிர்கொண்டழைத்து 4 குதிரை சாரட்டில் உட்காரவைத்து அழைத்துச் சென்றார். கவர்னர் ஜெனரலின் பங்களாவுக்குப் போனதும், 24.அ. 5-46 25. 5–184 26, 5-185 27. 5–189