பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 செய்வதாக இருக்கிறார். அது விடாமல் நடந்தால் 45 நாட்கள் ஆகும். இதன் நடுவில் வருஷத் திவசம் ஏதாவது வந்தால் அந்த நாட்கள் அதிகம் ஆகும். எனவே இந்த கூேடித்திரத்தில் 50 நாட்கள் தங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. பின்னரே பூரீகாசிக்குப் பயணம்' என்று 4-5-1821இல் எழுதிய எழுத்துச் சான்றில் காணப்படுகின்றமையின் காசியை அடைவதற்கு முன்னரே கயையில் 50 நாட்கள் தங்கிப்பின் காசியை அடைந்தார் மன்னர் என்பது அறியப்பெறும். மார்ச்சு மாதம் 10ஆம் நாள் கைரஷ்டி முகாமில் இருந்து மசூதாபாத், பாகல்பூர், அஜிமாபாத் முதலிய நகரங்களைப் பார்த்துக்கொண்டு மே மாதம் 4ஆம் நாள் கயைக்கு வந்தோம்" என்ற எழுத்துச் சான்றினால்' 4-5-1821இல் மன்னர் கயை கூேடித்திரத்தை அடைந்தார் என்பது உறுதியெய்தும். --- கயை ஒரு மலையின்மேல் இருக்கிறது. அங்குள்ள வீடுகள் வசதி பில்லாதவை; சிறியவை தெருக்கள் அகலம் இல்லாதவை; ஒரு யானையைச் செலுத்திச் செல்லாதவாறு குறுகியவை. கயை அரசரின் அரண்மனை சாஹேப் கஞ்ச் என்னும் இடத்தில் உள்ளது. அதில் மன்னர் தங்கினார். கயை அரசனின் பெயர் மித்ரஜித் சிங்கு என்பது ஆகும். இந்த அரசர் டிமிரி என்னும் ஊரில் இருப்பவர் ஆகையால் தன் அரண்மனையைச் சரபோஜி மன்னர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். கயையைச் சரபோஜி அடைந்த நாள் "அகூடிய திருதியை' ஆகும். சரபோஜி அரசர் "அஷ்ட கயை' செய்தார். சிலர் பஞ்ச கயை; சிலர் ஏகோத்திஷ்ட கயை. அஷ்ட கயைக்கு 47 திவசம், பஞ்ச கயைக்கு 37 திவசம்; ஏகோத்திஷ்டத்திற்கு 3 திவசம். அரசர் அஷ்ட கயை செய்ய உடன் போந்தவர்கள் தம்மால் ஆன முறையில் 2, 4, 7, 5 வீதம் திவசம் செய்து முடித்தார்கள்". பூரி ஜகந்தாத் இது ஒரு மிகப் பழமையான தலம்; மிகச் சிறந்த தலமும் ஆகும். அக்கோயிலுக்குப் பல அரசர்களின் அறக்கட்டளைகள் உண்டு. சரபோஜி மன்னர் அவர்கள் இத்தலத்தில் தருமம் ஒன்று ஏற்படுத்த நினைத்தார். தாடோறும் 12 பானைகள் சாதமும் பருப்பும் கறிகளும் சமைத்து நிவேதனம் செய்யவேண்டும் என்றும், அந்நிவேதனத்தைக் குருடர்கள் முடவர்கள் முதலியோருக்குக் கொடுத்தல் வேண்டும் என்றும், நிபந்தம் ஏற்படுத்தி நாளொன்றுக்கு ரூ. 2 வீதம் ஆண்டு ஒன்றுக்கு கு. 720 வீதம் ஆண்டு さ - C3. 104 35, 5-165 36, 5–167, 168 3.