பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 18 தோறும் அனுப்புவதாகக் கூறி ஓராண்டுக்குரிய தொகையைக் கோவில் அதிகாரியும் தாசில்தாருமான பூரீராம்போஸ் என்பவரிடம் கொடுத்தார்:. 20-1-1821 தேதி கொண்ட ஆவணம்" பூரி ஜகந்நாத் எனும் கூேடித்திரத்தில் சரபோஜி மன்னர் புஷ்பாஞ்சலி செய்து வழிபட்ட சிறப்பினைக் கூறுகிறது. மன்னர் தம் இரண்டு கைகளாலும் மலர்களைத் துரவி வழி படலானார் ; மனநிறைவு ஏற்படவில்லை ; உடன் வந்தவர்கள் கையிலும் மலர்களை அளித்துப் புஷ்பாஞ்சலி செய்வித்தார்; பின்னர் இறைவனின் திருவடிகளில் தனது தலையை வைத்து வணங்கினார். உடன் வந்தவர் அனைவரும் அங்ங்னமே இறைவனின் திருவடிகளில் தலை வைத்து வணங்கினர். ஜகந்நாத் என்னும் திருத்தலத்தில் ஏழுகாலம் நிவேதனம் செய்யப் படுகிறது. நிவேதனம் செய்வதற்குப் போக சமர்ப்பணம் ' என்று பெயர். 1. விடியற்காலை - பால போகம் : 2. 8 மணிக்குப் பொங்கல் போகம் ; 3. 10 மணிக்குச் சத்திர போகம் : 4, 12 மணிக்கு மத்தியாந்ந போகம்; 5. சாயங்கால வேளை ஸந்த்யா போகம் , 6. இரவு 11 மணிக்குத் தாண்டே சிங்காரம் 7. இரவு 1 மணி அர்த்தஜாமம் - போகபேண்ட போகம். முதலில் சாதம் வகையறா இரண்டாவது பொங்கல் : மூன்றாவது பதார்த்தங்களுடன் அன்னம் : நான்காவது நெய் போட்ட சாதம் ஐந்தாவது பூரி முதலியன ஆறாவது இனிப்பான பாயஸம் முதலியன எழாவது இளநீர் நிவேதிக்கப்படும். ஆறு நிவேதனங்களுக்கு 56 வகையான பண்டங்கள் நிவேதனம் தரப்பெறும். இவற்றுக்கு 56 போகமென்று. பெயர். சவாமிக்குப் பூசை நிவேதனம் முதலியவற்றுக்கு ஆண்டெ ான்றுக்கு গুচ. 56341 செலவு. இந்தத் தலத்தில் பொங்கல் சமயத்தில் சிறப்பு விழா நடைபெறும்; அதற்கு "மகர யாத்ரா" என்று பெயர். வங்காளம், காசி, கல்கத்தா முதலிய இடங்களிலிருந்து மக்கட்கூட்டம் வரும். - > இத்தகைய சிறப்புத் திருநாளைக் கண்டு களித்த மன்னர் போகி பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகிய மூன்று நாட்களும் அத்தலத்தில் தங்கி யிருக்க நினைத்தவர். மறுநாள் பால போகமும், அடுத்தநாள் புதன்கிழமை பொங்கல் போகமும், வியாழக்கிழமை தாண்டே சிருங்கார போகமும், வெள்ளிக் கிழமை சாயங்கால போகமும் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலத்தில் மன்னர் தரிசனம் செய்து கொண்டார். தேவகர் என்ற தல வரலாறு" பூரி ஜகந்நாதம் என்ற தலத்தைப்பற்றியும் அத்தலத்தில் புஷ்பாஞ்ச்லி செய்த விவரமும் விளக்கமாக எழுதியதுபோலத் ' தேவகர் " என்ற தல்த்து வரலாறும் சிறப்பாக மோடி எழுத்துச் சான்றுகளில் காணப்படுகிறது. r= == - _ -- - 37, 5-181 38. 5-182 முதல் 195 வரை 39. 5.98 முதல் 104 வரை,